முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'ALEXA' என்னும் புதிய 'HD' கேமரா:

வருங்காலங்களில் 'Digital' தொழில்நுட்பம் ஆட்சி செலுத்தும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது திரைப்படத் தயாரிப்பிலும் பிரதிபலிக்கிறது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேபோகிறது. அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து நாமும் நம்மை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம்.  நம்மை 'update' செய்துக்கொள்வது என்பது இன்றைய சூழலில் மிக ஆதாரமான செயலாகிறது. புதிய தொழில்நுட்பங்களையும் புதிய கருவிகளையும் அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன். அதன் வரிசையில் 'ARRI' நிறுவனத்திலிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 'ALEXA' என்கிற 'HD' தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராவைப்பற்றிய கட்டுரை இது.

லென்ஸ்: பாகம்-2

'லென்ஸ்'-ஐப் பற்றி முன்பே ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அது மேலோட்டமாக, ஒரு அறிமுகமாக மட்டுமே எழுதப்பட்டக் கட்டுரை. எந்தத் துறையானாலும், எதைப்பற்றி அறிந்து கொள்வதானாலும் அது பல கட்டங்களாகத்தான் நிகழும். அந்த வகையில் இந்தக் கட்டுரை 'லென்ஸ்'-ஐப் பற்றி அடுத்த கட்டப் பார்வையாக விவரிக்கப்படுகிறது. முந்தைய கட்டுரையில் விடுபட்ட சில விஷயங்களையும் இந்தக் கட்டுரையில் காணமுடியும். 'ஃபோகல் லெந்த்' (Focal Length), 'லென்ஸ் ஸ்பீட்' (Lens Speed) மற்றும் 'டெப்த் ஆஃப் பீல்ட்' (Depth of Field) போன்ற லென்ஸோடு சம்பந்தப்பட்ட சில காரணிகளைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்:

அண்மைக் காலமாக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அடுத்தத் தலைமுறை தொலைக்காட்சி 'HDTV' தொழில்நுட்பம் வந்துவிட்டது என்பதை. இந்த 'HD' என்பது என்ன? அதில் படங்கள் எப்படி இருக்கும்? இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் படத்திற்கும் HD படத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிய ஆர்வம் உங்களுக்கு உண்டா? அப்படியானால் இது உங்களுக்கான கட்டுரை.

என்ன வகையான கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன?

திரைப்படம் எடுக்க பல வகையான கருவிகள் உபயோகிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது 'கேமரா'(Camera) மற்றும் 'ஃபிலிம்' (Film) என்று அழைக்கப்படும் படச்சுருள். அதாவது படத்தைப் பதிவு செய்ய தேவையான கருவிகள். இப்போது இந்தியாவில், தமிழ்நாட்டில் என்ன வகையான கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன? அவற்றில் இருக்கும் வித்தியாசங்கள் என்ன என்பதை அறிய உங்களுக்கு ஆர்வம் உண்டா? நீங்கள் பல பெயர்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ARRI, ARRI-III, ARRI 435, Red One, HD, Super 16mm, Super 35mm, HDV எனப் பல வகையான கேமராக்களைப் பற்றியும் 'ஃபார்மேட்ஸ்'(Formats) பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றைப்பற்றி ஒரு அறிமுகமாக, சுருக்கமாகச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

செலவைக் குறைக்கும் '3 பர்ஃபரேஷன்' (3 Perforation):

திரைப்படமெடுக்க பொதுவாக 400ft ஃபிலிம் ரோல்கள் பயன்படுத்தப்படுகிறது. 35மிமீ ஃபிலிமில் இரண்டு பக்கமும் வரிசையாகத் துளைகள் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தத் துளைகளுக்கு 'பர்ஃபரேஷன் (Perforation)'என்று பெயர். இந்த 'பர்ஃபரேஷன்'கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கும்.  இந்தத் துளைகள், கேமராவில் லென்சுக்குப் பின்புறம் பிம்பம் பதியுமிடத்தில், ஃபிலிமை நிலையாக நிறுத்தப் பயன்படுகிறது. ஒரு பிம்பம், இந்தத் துளைகளின் (Perforation) வரிசையில் நான்கு துளைகளுக்கு இடைப்பட்ட பரப்பளவில் பதிக்கப்படுகிறது. அதாவது ஒரு frame-க்கு 4 Perforations தேவைப்படுகிறது.

The Battle of Algiers: அல்ஜீரியப் போர்

The Battle of Algiers: அல்ஜீரியப் போர் அல்ஜீரியா என்பது வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் சூடானுக்கு அடுத்து இரண்டாவது பெரிய அரேபிய தேசம். பரப்பளவில் உலகின் பதினோராவது இடம். 130 ஆண்டுகளாக ஃபிரான்ஸின் காலனியாக இருந்து வந்ததிலிருந்து சுதந்திரம் பெற 1954-ல் போராடத்துவங்கினார்கள். FLN (National Liberation Front) என்ற அமைப்பு அதற்குத் தலைமை வகித்தது. கெரில்லா தாக்குதல்கள் மூலம் தங்களுடைய சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார்கள். ஃபிரான்ஸ் தன் இராணுவத்தைக் கொண்டு அதை அடக்க முயற்சித்தது. பொதுமக்களைத் தாக்குவது, சித்திரவதைகளைக் கையாள்வது என இராணுவம் ஈடுபட...  வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது, பொதுச்சொத்துகளுக்கு நாசம் விளைவிப்பது என FLN பதிலடி கொடுத்தது. இரண்டு புறமும் சரிச்சமமாக வன்முறைகள் கையாளப்பட்டன.

முன்னுரை: இரத்தமும் சினிமாவும்

இரத்த ஆறுகள் பலவற்றைப் பார்த்த பூமியிது. காலம் தோறும் இரத்தத்தால் குளிப்பாட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. கொள்ளை, கொலை என ஆரம்பித்து அடக்குமுறை, அடிமைத்தனம் என பல வடிவங்களில் வளர்ந்து ஆதிக்கம், காலனியாதிக்கம் என்று உருவெடுத்த உலகமிது. இன்று, நேற்று அல்ல, என்று மூன்றாவது மனிதன் தோன்றினானோ அன்றே துவங்கிவிட்ட பழக்கமிது. தேவையென்றால் எவனையும் எதையும் அடித்துப் பிடுங்கலாம் என்பது நியதியாயிற்று. 'வலியது மிஞ்சும்' என்ற உயிரியல் விதி, உயிர் வாழ்ந்தே தீரவேண்டிய கட்டாயத்தை வலிவுறுத்த வந்தது. மனிதனுக்கு அதுவே சௌகரியமாய்ப் போயிற்று. தன் உயிருக்கும், இருப்பிற்கும் ஆபத்து வந்தபோதெல்லாம் எதிர்க்கத் தெரிந்திருந்த உயிரினம், தன் உடைமைக்கும் உணர்வுக்குமாக தன் போராட்டத்தை நீட்டியது. அங்கே தான் இது துவங்கிற்று. உடைமையென்பது கொள்ளை கொள்வது, உணர்வு என்பது மிதிக்கப்படுவது என்ற புதிய சித்தாந்தம் நடைமுறைக்கு வந்தது. எதை எதையோ மறந்துபோன மனிதக் கூட்டம், இதை மட்டும் மறந்ததே இல்லை. தொடர்ந்து பயன்பாட்டிலிருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. நாகரீகம் என்ற ஒன்று உருவானபோதே துவங்கிய போர் இது. எங்கெ

மைக்கேல் காலின்ஸ்: Michael Collins

படம்: மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) திரைக்கு வந்த ஆண்டு:1996 இயக்குனர்: நீல் ஜோர்டன் (Neil Jordan) "சில மனிதர்கள் கால ஓட்டத்தில் தேவைப்படுகிறார்கள், அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை. இப்போது அவர் இறந்துவிட்டார், ஆனால் வாழ்க்கை இருக்கிறது. அவரே அதை சாத்தியப்படுத்தினார்". 

ஒளியமைப்பு (Lighting)

"ஒளி என்பதும் ஒரு கதாப்பாத்திரம். ஒரு சக்தி. ஒளியமைப்புச் செய்யும் போது அதை மனதில்கொண்டு கையாண்டு பயன்படுத்து. பிறகு பார் அதன் பலனை."  - V.K.மூர்த்தி ஓ ர் ஒளிப்பதிவாளனாக நான் எப்படி ஒரு காட்சிக்கு ஒளியமைப்புச் செய்கிறேன் , எதையெ ல்லாம் காரணிகளாகக் கொள்கிறேன் , எவற்றையெல்லாம் கவனிக்கிறேன் என்ப தையும், ஒளியமைப்பில் நான் பின்பற்றும் முறையையும், என் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, ஒளியமைப்புப் பற்றிய ஒரு அறிமுகத்தை உங்களுக்கு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் . ஓ ர் ஒளிப்பதிவா ளர் என்பவ ர் இரண்டு விதத்தில் செயல்படவேண்டும். ஒன்று அவ ரு டைய ரசனை மற்றும் கற்பனை சார்ந்த அறிவு ( Creative Knowledge) மற்றொன்று தொழில்நுட்ப அறிவு ( Technical Knowledge). இ வ்வி ரண்டு அறிவையும் எப்படிப் பயன்படுத்துகிறா ர் , எப்படி ஒன்றிணைக்கிறா ர் என்பதைப் பொறுத்தே அவ ரு டைய படைப் பின் மே ன் மை வெளிப்படு கிறது. ஒரு காட்சி விவரிக்கப்பட்டவுடன் அவர் முதலில் பார்க்க வேண்டியது, அக்காட்சி நடக்கும் தளத்திற்கு ஒளி எப்படி க் கிடைக்கிறது என்பதைதான். உதாரணமாக ஒரு சிறிய படுக்கை அற