முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Inception - ஒரு பார்வை

'Inception' படம் நேற்றுதான் பார்த்தேன். வழக்கம் போல 'நோலன்', தான் ஒரு தனித்துவமான படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார். படத்தை ஏற்கனவே பார்த்து  புரிந்துகொண்டவர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள், புரியாதவர்கள் ஆர்வம் இருந்தால் புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.  'Inception' பற்றி பதிவு போடாமல் இருந்தால் அது தானைத்தலைவன் 'நோலன்' அவர்களுக்கு செய்யும் அவமரியாதை, ஆனால் கதையைப்பற்றி பேசி உங்களையும் குழப்ப நான் விரும்பவில்லை. அதனால் அந்தப்படத்தின் சில தொழில்நுட்பங்களையும், உருவாக்கத்தைப்பற்றியும் சில தகவல்கள் இங்கே.

நாம் அந்நியர்கள்

இரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை தங்களால் இதைத் தடுக்க முடியாது என்று வெளியேறி இருக்கிறது. அமெரிக்கா வணிகம் பார்த்திருக்கிறது. மற்ற நாடுகள் ஒதுங்கி இருந்திருக்கின்றன. உலகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்திருக்கிறது.  இது சமீபத்தில் நமக்கு அருகில் நிகழ்ந்த ஒன்றாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் இது அதுவல்ல. இது நடந்து சில வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் சம்பவங்கள் ஒன்றுதான்.