முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘எளியோர் செய்த போர்’

வாழ்ந்து வந்த பாதையைப் பதிவு செய்து வைப்பது வருங்காலத்திற்கான வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையே வரலாறுகள் எழுதப்பட்டதற்கான காரணமாக இருந்திருக்க முடியும். ஒரு தேசம், ஒரு இனம் இன்று நிற்கும் இடம் என்பது எவ்வளவு தூரத்தை, பாதையை கடந்து வந்தது என்பதை வரலாறுகள் நினைவுறுத்த வேண்டும். வரலாறு என்பது என்ன? ஆண்ட அரசனையும், மாண்ட மன்னனையும் துதி பாடுவதா? பேரரசையும் பேரிழப்பையும் நினைவில் கொண்டு பெருமூச்செறிவதா? இல்லை.. அது வாழ்ந்த, செழித்த, வீழ்ந்த எளிய மக்களின் பதிவாக இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும். தனித்து வாழ்ந்த மனிதன் குழுவாக இணைந்து வாழத்துவங்கியபோது மொழி, நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என வளர்ச்சியடைந்தான். வளர்ச்சி எப்போதும் இன்னொரு சாராருக்கு ஏக்கம் கொள்ள வைக்கும். ஏக்கம் பகைமையாக மாறும். பகைமை ஆபத்தை விளைவிக்கும். ஆக்கிரமிப்பு, அடிமைமுறை என பல வடிவங்களில் தன் அதிகாரத்தை நிலைநிறுத்தத் தூண்டும். அவ்வழியிலேயே பல இனங்கள் அடிமைப்பட்டுப்போயின. அடிமை கொண்டவன், அடிமைப்பட்டவனின் வாழ்வை மட்டுமல்ல வரலாற்றையும் ஆக்கிரமித்தான். கட்டுக்கதையும், அயோக்கியத்தனமும் உருவெடுத்தன. பொய்

‘Scarlet-X’ - சவால் விடும் புது எதிரி

Canon நிறுவனத்தின் ‘EOS C300’ அறிவிக்கப்பட்ட அதே நாள், அதன் தற்போதைய போட்டியாளராக கருதப்படும் RED ONE நிறுவனத்தின் அடுத்த கேமரா அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்புதிய கேமராவிற்கு ‘Scarlet-X’ என பெயரிடப்பட்டிருக்கிறது. “The future is dependent on those who push… not those who react,” - Jim Jannard, founder of RED Digital Cinema. RED ONE கேமராவின் அறிமுகமே ஒரு புதிய புரட்சியாக அப்போது பார்க்கப்பட்டது. அக்கேமரா ஆகஸ்டு 2007-இல் நடைமுறைக்கு வந்தபோது அதன் தொழில்நுட்பம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிறிய வடிவில் இருந்த அக்கேமராவின் தரம் (4K) பிரமிப்பைக் கொடுத்தது. ஃபிலிமை யே(Film) மையமாக கொண்டிருந்த திரையுலகம் டிஜிட்டலை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பியது. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. முதல் காரணம், இச்சிறிய கேமராவில் கிடைத்த 4K விடியோ தரம். அதுநாள் வரை ஒரு விடியோ கேமராவினால் இத்தகைய தரத்தைக் கொடுக்க முடியும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஒருவேளை ‘ரெட் ஒன்’ அப்போது வெளியாகி இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் வேறொரு கேமராவில் அது சாத்தியமாகி இருக்கு

Canon EOS C300 - Cinema Camera: புதிய வரவு

அது ஒருநாள் கண்டிப்பாக நடக்கும் என அனைவராலும் நம்பப்பட்டது, எதிர்ப்பார்க்கப்பட்டது. அது இப்போது நடந்து விட்டது. ஆமாம் கேனான் (Canon) எல்லாருடைய எதிர்ப்பார்பையும் மெய்ப்பித்திருக்கிறது. திரைத்துறையில் ‘ஃபிலிமுக்கு’ (Film) மாற்றாக டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும்.. அது தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில்தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிலையில் கேனான் நிறுவனத்தின் Canon EOS 5D Mark II அறிமுகமாகி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. 5D என்பது புகைப்படக் கலைஞர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் அதில் தரமான விடியோவும் எடுக்க முடிந்தது யாரும் எதிர்ப்பார்க்காத கூடுதல் வசதி. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களுக்கும் அக்கேமராவை பயன்படுத்தத் துவங்கியது கேனான் நிறுவனமே எதிர்ப்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி. இக்கேமரா திரைத்துறையை மிக வேகமாக டிஜிட்டலை நோக்கி நடைப்போட வைத்திருக்கிறது. Canon EOS 5D Mark II  5D போன்ற சிறு கேமராக்களின் வரவும் வெற்றியும் அது தொடர்ந்து நீடித்து நிலைக்கும் என்ற எதிர்கால நம்பிக்கையும், இத்துறையில் பல புதிய தொழில்நுட்ப எதிர்ப்பார்ப்புகளை தோற

திரைப்படம்: பிரிண்டிலிருந்து திரையிடல் வரை (From Print to Screening)

“தோழர், ப்ரிண்டிலிருந்து திரையிடல் வரை என்று ஒரு பதிவு போடவும். ஏனெனில் நான் இருதினங்களுக்கு முன், 7ஆம் அறிவு திரைப்படம் பார்த்தேன். பல காட்சிகளில், தேவையற்ற blur (out of focus) வந்தது. நிச்சயம் ரவி கே. சந்திரன் அவர்கள் இப்படிப் படம் பிடித்திருக்க மாட்டார் என்று நம்புகின்றேன். என்னவோ ப்ரொஜெக்டரில் பிரச்சினை. ஆகவே, முதல் பிரிண்ட் ரெடியானதிலிருந்து திரையரங்கில் திரையிடப்படும் வரை என்ன நடக்கின்றது என்பதைப் பற்றியும் பலவிதமான ப்ரோஜெக்டர்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதவும்.” நண்பர் சக்திவேல் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பதிவு எழுதப்படுகிறது. நன்றி சக்திவேல்.  திரைப்பட உருவாக்கத்தில் பல நிலைகள் உள்ளன. காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு திரைக்கதை ‘செல்லுலாய்டு’ படச்சுருளில் திரைப்படமாக எப்படி உருவாக்கம் செய்யப்படுகிறது என்பதைப்பற்றி பல கட்டுரைகள் இத்தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் எடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை என்னும் கட்டுரையின் தொடர்ச்சியாக இக்கட்டுரை எழுதப்படுகிறது. பிரிண்ட்டாக (Print - பிரதி) இருக்கும் திரைப்படம் நம்மிடம் எப்படி வந்துச் சேருகிறது என்பதையும், இப்பிரிண்டுகள் திர

காளான் மேகம்

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறாம் தேதி அது நிகழ்ந்தது. உலகம் அதுவரை கண்டிராத அரக்கன் ஒருவன் உலகத்தாருக்கு அறிமுகமானான். அவனுக்குச் ‘சிறிய பையன்’ (Little Boy) என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் அவன் ஒரு பெரும் அரக்கன். கணநேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த அரக்கன் . உலகம் இன்றுவரை அவனை நினைவில் வைத்திருக்கிறது. அவன் வேறு யாருமல்ல, அணுகுண்டு என்னும் பேரரக்கன்தான் அவன். வட அமெரிக்கா தன் கொடூரத்தன்மையின் மற்றொரு முகத்தை அன்று வெளிக்காட்டியது. ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மீது முதல் அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த அடுத்த நொடியில் எழுபதாயிரத்திலிருந்து எண்பதாயிரம் மக்கள் தீயில் கருகி மாண்டு போனார்கள். அதாவது அந்நகரத்தின் முப்பது சதவிகித மக்கள் நொடியில் சாம்பலானார்கள். மேலும் எழுபதாயிரம் மக்கள் படுகாயம் அடைந்தனர். அதன்பின் 90,000 முதல் 1,66,000 மக்கள் வரை குண்டு வெடிப்பின் பின் விளைவுகளால், அதாவது தீக்காயம், கதிரியக்கப் பாதிப்பு போன்றவற்றால் இறந்துப் போனார்கள். 1950 வரை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் இறந்துபோனார்கள்

குளிர்ப்பிரதேசத்தில்..

புகைப்படம்: பசுமையான கொடைக்கானலின் மடியில் அமைந்த கல்லூரியில் பயிலும் ஏழு மாணவர்களின் கல்லூரிக்காலத்தை இந்தப்படம் விவரிக்கிறது. நான்கு ஆண்கள் மூன்று பெண்கள். இவர்களின் நட்பு, காதல் பற்றியான ஒரு பகிர்வு இந்தப்படம். இதன் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் பசுமையை முடிந்தவரை கொண்டுவர முயன்றிருக்கிறேன். மென்மையான ஒளிகளை பயன்படுத்தி இருக்கிறேன். காட்சிப்படுத்துதல், எடிட்டிங், இசை, சிறப்பு சப்தம் என்று எதிலும் இன்றைய நவீன திரைப்படங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப கதைச்சொல்லல் (Camera Shake, Zooming, Fast Cut, Swish Pan, Flash Sounds) முறையைப் பயன்படுத்தவில்லை. ஒரு மென்மையான கதை அதன் போக்கில் நெகிழ்வாக சொல்லப்பட்டிருக்கிறது. இது எனக்கும் இயக்குனருக்கும் முதல் படம். முதல் முயற்சி. முதல் முயற்சிக்கே உரிய எல்லா சாத்தியங்களையும் இந்தப்படம் கொண்டுள்ளது. இந்தப்படத்தின் பாடல் காட்சிகள் பெரும்பாலும் கொடைக்கானலின் இயற்கை ஒளியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டன. மாலை அந்தி நேரத்தில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. Super 16mm தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டப் படம். அந்த தொழில்நுட்பத்தின் குறைபாடுகளான 'Low

வறண்ட பிரதேசத்தில்..

'மாத்தியோசி' வறண்ட பிரதேசத்தில் தனித்துக்கிடக்கும் ஒரு கிராமத்தில் சுற்றித்திரியும் நான்கு இளைஞர்களைப் பற்றிய படம். அந்த இளைஞர்கள் சில காரணங்களால் சென்னைக்கு அடைக்கலம் தேடி ஓடி வருகிறார்கள். வறுமையில் கிடக்கும் ஒரு கிராமம் மற்றும் செழுமையில் திளைக்கும் சென்னையின் புறநகரப்பகுதிகள்தான் இதன் களங்கள்.  சுட்டெரிக்கும் வெய்யிலையும் புழுதியையும் வறட்சியையும் வறுமையின் குறியீடாக பயன்படுத்தினோம். இந்த நான்கு நண்பர்களின் சூழ்நிலைகள் எப்போதும் கொளுத்தும் வெய்யிலில் இருப்பதாக அமைத்துக்கொண்டோம். கிராமத்தில் வரும் வில்லன்கள் எல்லாரும் நிழலில் (இருண்ட மனம் கொண்டவர்கள்) இருக்கும்படி பார்த்துக்கொண்டோம்.  படத்தின் முதல் பகுதி முழுவதும் கரடுமுரடான நிலப்பகுதியில் நிகழ்கிறது. அதற்கு ஏற்றவாறு 'பிம்பங்களை' ஒளிப்பதிவு செய்தோம். ஒளியமைப்புக்கு இயற்கை ஒளிகளைப் பயன்படுத்தினோம். பெரும்பாலும் சூரிய ஒளி பயன்படுத்தப்பட்டது. சூரிய ஒளியை 'High Light'-ஆகப் பயன்படுத்தினோம். பல இடங்களில் 'Fill Light' பயன்படுத்தப்படவில்லை. அழகியலுக்கு முன்னுரிமை தராமல் ஒருவித 'Rough Imag