முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வறண்ட பிரதேசத்தில்..

'மாத்தியோசி' வறண்ட பிரதேசத்தில் தனித்துக்கிடக்கும் ஒரு கிராமத்தில் சுற்றித்திரியும் நான்கு இளைஞர்களைப் பற்றிய படம். அந்த இளைஞர்கள் சில காரணங்களால் சென்னைக்கு அடைக்கலம் தேடி ஓடி வருகிறார்கள். வறுமையில் கிடக்கும் ஒரு கிராமம் மற்றும் செழுமையில் திளைக்கும் சென்னையின் புறநகரப்பகுதிகள்தான் இதன் களங்கள்.  சுட்டெரிக்கும் வெய்யிலையும் புழுதியையும் வறட்சியையும் வறுமையின் குறியீடாக பயன்படுத்தினோம். இந்த நான்கு நண்பர்களின் சூழ்நிலைகள் எப்போதும் கொளுத்தும் வெய்யிலில் இருப்பதாக அமைத்துக்கொண்டோம். கிராமத்தில் வரும் வில்லன்கள் எல்லாரும் நிழலில் (இருண்ட மனம் கொண்டவர்கள்) இருக்கும்படி பார்த்துக்கொண்டோம்.  படத்தின் முதல் பகுதி முழுவதும் கரடுமுரடான நிலப்பகுதியில் நிகழ்கிறது. அதற்கு ஏற்றவாறு 'பிம்பங்களை' ஒளிப்பதிவு செய்தோம். ஒளியமைப்புக்கு இயற்கை ஒளிகளைப் பயன்படுத்தினோம். பெரும்பாலும் சூரிய ஒளி பயன்படுத்தப்பட்டது. சூரிய ஒளியை 'High Light'-ஆகப் பயன்படுத்தினோம். பல இடங்களில் 'Fill Light' பயன்படுத்தப்படவில்லை. அழகியலுக்கு முன்னுரிமை தராமல் ஒருவித 'Rough Imag

எங்கேயும் எப்போதும் - உணர மறுக்கும் நிஜம்

தெளிவான திரைக்கதையோடும் தேர்ந்த இயக்கத்தோடும் வந்திருக்கிறது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களும் அவர்களூடே பின்னப்பட்ட காட்சிகளுமாக படம் நம் மனதைக் கவர்கிறது. சரியான கதாபாத்திரத் தேர்வும் சிறந்த நடிப்பும் அவர்களை நம்மிடயே வாழ்பவர்களாக உணர வைக்கின்றன. ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, CG என ஒட்டு மொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இரண்டு காதலும் நம்மை பரவசப்படுத்துகின்றன. அதே நேரம் கொஞ்சம் எதார்த்தத்தை மீறி.. இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. எது சரி, எது தவறு என்பதை நான் இங்கே விவாதிக்கப்போவதில்லை. எனக்கும் படம் முழுமையாக பிடித்திருக்கிறது, எவ்வித குறைகளும் இல்லாமல். இரண்டு அழகான காதலுக்கு நேரும் இம்முடிவு சிறிது உறுத்தினாலும், வாழ்க்கையின் குரூர முகத்தை அது பிரதிபலிக்கிறது என்பதாகத்தான் எடுத்துக் கொள்கிறேன். பொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் செய்தியில் பார்க்கும் விபத்துக்கள், நம்மை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியவில்லை. நம்மை அது

எரியும் தியாகம்

ஜூன் 11,1963 ஆம் ஆண்டு வியட்நாமின் தலைநகரான சாய்கான் நகரில் ‘Thich Quang Duc’ என்னும் இந்த புத்தத் துறவி தன்னைத்தானே எரியூட்டிக் கொண்டார். அப்போது தெற்கு, வடக்காக பிரிந்திருந்த வியட்நாமில், தெற்கு வியட்நாமை ஆண்ட ‘Diem’ (Ngo Dinh Diem) அரசாங்கம், புத்தமதத்தின் மீதும் புத்தத் துறவிகள் மீதும் நிகழ்த்திய அடக்குமுறைகளுக்கு எதிராக இதை அவர் செய்தார். இப்படத்தை எடுத்த ‘மால்கம் பௌரவுன்’ (malcolm Browne) இப்படத்திற்காக புலிட்சார் விருது பெற்றார். Ngo Dinh Diem அரசாங்கம்:  1954 ஆம் ஆண்டு வியட்நாமை விட்டு பிரான்ஸ் வெளியேறிய பிறகு தெற்கு வியட்நாமின் முதல் சனாதிபதியாகப் பதவியேற்றவர் இந்த ‘Ngo Dinh Diem’. பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததனால், வட அமெரிக்காவின் உதவியைப் பெற்று தன்னை வியட்நாம் குடியரசின் முதல் சனாதிபதியாக நிலை நிறுத்திக்கொண்டவர். ஊழலும், சீர்கெட்ட ஆட்சி முறையையும் கொண்டிருந்தார். ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றிய இவர், வியட்நாமின் பூர்வீக மதங்களையும், பரவலாக பரவி இருந்த புத்தமத்தையும் அழிக்க நினைத்தார். பல விதங்களில் மதத் துவேசத்தை வெளிப்படுத்