முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'ARRI ALEXA' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்_Part-2

இக்கட்டுரை,   'ARRI ALEXA' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்  - என்ற கட்டுரையின் தொடர்ச்சி. அதைப் படித்துவிட்டு தொடரவும். ஒரு டிஜிட்டல் கேமராவின் முக்கிய பாகங்களாக அதன்.. அ. லென்ஸ் மௌண்டு (Lens Mount) ஆ. இமேஜ் சென்சார் (Image Sensor) இ. ரெக்கார்டிங் (Recording) ஈ. வியு பைண்டர் (View Finder) போன்றவைகள் கருதப்படுகின்றன என்பதையும், அதில் ‘லென்ஸ் மௌண்டு’ பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்துவிட்டோம் என்பதை நீங்கள் படித்துவிட்டுத்தான் இங்கே வந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையைத் தொடர்கிறேன்..  ஆ. இமேஜ் சென்சார் (Image Sensor): டிஜிட்டல் கேமராக்களின் மிக ஆதாரமான பாகம், அதன் சென்சார் தான். சென்சாரின் தரத்தைப் பொருத்தே டிஜிட்டல் கேமராக்களின் தரம் மதிப்பிடப்படுகிறது. 'Single CCD', '3 CCD' கேமராக்களைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ‘CCD’ மூலம் ஒளியை உள்வாங்கி பதிவுசெய்வது என்பது 'Single CCD' கேமரா எனவும், மூன்று ஆதார வண்ணங்களுக்கு ஏற்ப, மூன்று தனித்தனியான 'CCD'-க்கள் மூலமாக ஒளியை பிரித்து உள்வாங்கி, பதிவ

'Kodak' என்னும் சகாப்தம் அதன் முடிவை நோக்கி..

ஜனவரி 19, 2012 அன்று கொடாக் (Kodak) நிறுவனம் ஒரு அதிர்ச்சியை உலகத்தாருக்குக் கொடுத்தது. அந்நிறுவனம் 950 மில்லியன் டாலர், வங்கிப் பாதுகாப்பு கேட்டு கொடுத்த (bankruptcy protection) நோட்டிஸ் தான் அந்த அதிர்ச்சி. அது கொடாக் நிறுவனத்திற்கு மட்டுமான துயரம் இல்லை. உலகத்தின் பெருவாரியான புகைப்படக்காரர்களின் துயரமும் கூட. 1880-இல் துவங்கப்பட்ட கொடாக் நிறுவனம், நூற்றாண்டு கடந்தும் பல புகைப்படக்காரர்களின் விருப்பத்திற்குரியதாக இருந்திருக்கிறது. சொல்லப்போனால் பல புகைப்படக்காரர்களை உருவாக்கியதே அதுதான் எனலாம். புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதே கொடாக் தான். அது கண்டுபிடித்த படச்சுருள் தான் புகைப்படம் பிடித்தலை உலகத்தாரிடையே பரப்பியது, அதிகரித்தது. முதல் படச்சுருள் , முதல் கேமரா, முதல் டிஜிட்டல் கேமரா என அது கண்டுபிடித்த பல 'முதல்'கள் உலகெங்கும் பிரபலம். புகைப்படம் பிடித்தலை எல்லாருக்குமானதாக மாற்றிக் காட்டியது அதன் பெரும் சாதனை . ஒரு வகையில் எல்லாருடைய வாழ்க்கையிலும் கொடாக் சம்பந்தப்பட்டிருக்கிறது. சிறுவயதிலிருந்து நாம் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை ஒரு நிமிடம் நினை

இரத்தத்தில் உறைந்த வைரம்

வைரக் கற்களை உற்பத்தி செய்யும் உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்று. தாதுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நிய செலாவணியை ஈட்டும் நாடு. 'டைட்டானியம்', 'பாக்சைட்' மற்றும் தங்கம் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. உலகின் மூன்றாவது பெரிய இயற்கைத் துறைமுகத்தைக் கொண்ட நாடும் கூட... ஆனாலும் அதன் எழுபது சதவிகித மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். அந்நாடு 'சியரா லியோன்' (Sierra Leone). மேற்கு ஆப்பிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடலின் கடற்கரையை ஒட்டியமைந்த ஒரு சிறு நாடு. மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே எல்லா இயற்கை வளங்களையும் கொண்டது. சுரங்கத் தொழிலை ஆதாரமாக கொண்ட நாடு, குறிப்பாக வைரக் கற்களை அதிகமாக தோண்டி எடுக்கும் நாடு. ஐம்பத்தி நான்கு லட்சத்திலிருந்து அறுபத்தி நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. அறுபது சதவிதம் முகமதியர்களும், அதிக அளவு கிருத்துவ சிறுபான்மையர்களும் வாழ்கிறார்கள். பதினாறு சிறு இனக்குழுக்கள், சமவிகிதத்தில் நாட்டின் முப்பது சதவிகித மக்கள் தொகையாக வாழ்ந்தாலும், அவர்களிடையே இனப்பிரச்சனையோ, மதப்பிரச்சனையோ எழ