முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதுபான கடையின் ஊடாக ஒரு பாதை

‘மதுபான கடை’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் வேத் சங்கர் அவர்களை வேறொரு பட வேலையாக சந்தித்தபோது, அவர், தான் அப்போது செய்துகொண்டிருந்த படம் இது என சொல்லியதன் மூலம், ‘மதுபான கடை’ படத்தை அறிந்துக்கொண்டேன். அப்போது அப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தது என நினைக்கிறேன். மதுபான கடை என்னும் தலைப்பு குடியை ஆராதிக்கும் படம் என்பதாய் எனக்குப்பட்டது. குடியின் மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு இருந்ததில்லை (இதுவரை.. நாளை என்னாகுமோ..? யாருக்குத் தெரியும்.. ). அதனால் அதை தொடாமலேயே இருக்கிறேன். பரிசோதனையாகக் கூட முயற்சித்துப் பார்க்காமலிருக்கிறேன், பல நண்பர்களின் பரிகாசகங்களுக்கிடையேயும். அதனால் குடியைப் பற்றிய படம் என்பதனால், அதன் மேல் எவ்வித நாட்டமும் ஏற்படவில்லை. அப்படம் வெளியாகியபோதும் முதல் நாளே பார்க்க வேண்டும் என்ற எவ்வித உந்துதலுமற்று இருந்தேன். படம் வெளியாகி, நல்ல படம், பார்க்கவேண்டிய படம் என்ற செய்தி நண்பர்களின் மூலமாய் வந்தடைந்த போது, கால தாமதமாகி விட்டிருந்தது. அருகில் எந்த தியேட்டரிலும் அப்படம் ஓடவில்லை. அதற்குள்ளாகத் தூக்கி விட்டிருந்தார்க்ள். அட.. எங்கேதான் பார்ப்பது என்று

காமிக்ஸ் விதை

மிக நீண்ட கால காமிக்ஸ் ரசிகன் நான். பள்ளிப் பருவத்தில் துவங்கிய காமிக்ஸ் படிக்கும் பழக்கம் இப்போதும் தொடருகிறது. ஒரு நேர்த்தியானப் படத்தை, ஒரு சிறந்த நாவலை எப்படி அணுகுகிறேனோ அதேவிதத்தில் தான் ஒரு காமிக்ஸையும் அணுகுகிறேன் என்பதை அறிந்த என் நண்பர்கள் எப்போதும் ஆச்சரியத்திற்கு உள்ளாகிறார்கள்.  “அட என்ன சின்னப்புள்ளையாட்டும் இன்னும் காமிக்ஸ் படிக்கிறீர்கள்..?!” என்று கேட்ட பல நண்பர்கள் எனக்குண்டு. என்ன செய்வது, நண்பர்கள் பலவிதம். .  :) இருபதிலிருந்து இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பான ஒரு மதிய நேரம், ‘ஜேம்ஸ்பாண்டு 007’-ஐ நாயகனாகக் கொண்ட ‘அழகியைத் தேடி’ என்னும் ராணிக் காமிக்ஸ் ஒன்று என் கையில் வரமாக வந்து சேர்ந்தது. அவ்வரத்தை தந்தவர், என் பெரிய மாமா ‘கலைவாணன்’ அவர்கள். தன் அக்காவையும் அக்கா மகன்களையும் பார்க்க வந்தவர், எங்களுக்கு அன்பளிப்பாக இக்காமிக்ஸை கொண்டுவந்திருந்தார். அன்று படித்த அந்தக்கதை இன்றும் நினைவிலிருக்கிறது. தமிழை எழுத்து கூட்டியே படிக்கத் தெரிந்த போதும், விடாமல் வாசித்தோம். நண்பர்கள் கூடி வாசித்தோம். யோசிக்க.. அந்தப் புத்தகமே என் வாசிப்பு பழக்கத்திற்கு அடித்தளமாகிய