Posts

Showing posts from December, 2013

Cinematic Lighting in Wedding Photography - Trichy - 23.04.19

Image
கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் நாடு முழுவதும் பல்வேறு பயிற்சிப்பட்டறையை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு துறைச்சார்ந்து நடத்தி வருகிறேன். அவ்வகையில் வரும் செவ்வாய் கிழமை (23/04/19) அன்று திருச்சியில் 'சினிமேட்டிக் லைட்டிங் இன் வெட்டிங் போட்டோகிராபி’ என்ற தலைப்பில் 'திருச்சி நிக்கான் டெக்னிக்கல் கிளப்' ஒரு பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்திருக்கிறது.

‘Lighting’ என்பது புகைப்படக்கலையின் ஆதாரமான ஒன்று. ஒளியை எப்படி பயன்படுத்துவது என்பதும், அதன் பல்வேறு கூறுகளைப்பற்றியும் இப்பயிற்சி வகுப்பில் காணப்போகிறோம். ஒளியின் தன்மை, ஒளியின் அளவு, ஒளியின் வண்ணம், ஒளியின் அடர்த்து போன்றவற்றைப் பற்றியும், ஒரு தரமான புகைப்படத்திற்கு ஒளியின் அளவைப்போலவே ஒளியின் தரம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் பார்க்கப்போகிறோம்.

இப்பயிற்சி வகுப்பில்..

1. ஒளியமைப்பின் அடிப்படையான Three Point Lighting மற்றும் அதன் பயன்பாடு.

2. ஒரே ஒரு விளக்கை (Light) வைத்துக்கொண்டு எப்படி பல்வேறு வகையில் ஒளியமைப்பது என்பதையும், அதனைப் பயன்படுத்தி எப்படி சிறப்பான புகைப்படத்தை எடுப்பது.

3. ஒளியை சிறப்பாக பயன்படுத்துவது எ…

பிக்சல் - டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல் வெளியீடு

Image
தகவல்:

இப்புத்தகம் ஜனவரி நான்காம் தேதி வெளியிடப்பட்டது.

கிடைக்குமிடம்:
டிஸ்கவரி புக் பேலஸ்.
கே.கே.நகர். சென்னை - 78
தொடர்புக்கு:https://www.facebook.com/discovery.palace?fref=ts

-------------------------------------------------
தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”, வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவல் மகிழ்ச்சியையும் ஆவலையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது. அவரிடமும் தொழில் பயின்றவன் என்ற முறையில் இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

பிக்சல் -முழுமையான டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்


இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட புகைப்பட விளக்கங்களுடன் சினிமாவின் ஆரம்பம் முதல் 1670 தொடங்கி 2012 வரை நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளது. மேலும் தற்போது உபயோகத்த…