முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'Gravity' திரைப்படம் ஒரு பார்வை:

'Gravity' படத்தை எத்தனை முறை பார்த்தாலும், படத்தின் முடிவில் அது ஏற்படுத்தும் பரவச மனநிலையிலிருந்து அவ்வளவு சுலபமாக வெளிவரவே முடிவதில்லை. அத்திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அதுவெழுப்பும் மனக் கிளர்ச்சியை வார்த்தைகளால் இங்கே விவரித்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். இசையை அனுபவிக்கும் போது ஏற்படுமே.. அதுபோன்றொரு மன ஓட்டத்தை இப்படம் தொடர்ந்து ஏற்படுத்துகிறது. சிந்தனைத் தொடர்ச்சி ஒன்று ஏற்பட்டு வளர்ந்துகொண்டே போகிறது. வாழ்க்கை, அறிவியல், தத்துவம், சித்தாந்தம், இயற்கை, ஆத்திகம், நாத்திகம், இன்பம், துன்பம் என அது பயணிக்கும் பாதைகள் சொல்லில் அடங்கா. பூமியிலிருந்து 372 மைல் தூரத்தில் தனித்து விடப்படும் கதாப்பாத்திரங்களோடு நாமும் கைவிடப்பட்டதான ஒரு பரிதவிப்பை ஏற்படுத்துகிறது. அண்ட வெளியில் பரவிக்கிடக்கும் ஆழ்ந்த அமைதியே மனமெங்கும் எதிரொலிக்கிறது. பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தனித்து விடப்பட்டதாக உணர்கிறார்கள் என்பதை திரையரங்கில் விரவிக்கிடக்கும் அமைதி உணர்த்துகிறது. மற்ற திரைப்படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் வேறானதொரு தளத்தில் இயங்குவதை படம் துவங்கிய சிறிது ந

திரைத்துறையில் முகமறியா மனிதர்கள்:

பொதுவாக,  ஒரு திரைப்படத்தில் நான் பணி புரியும் போது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அடைவேன். இந்தக் கணமே நிஜம் என்பதைப்போல முழு ஈடுபாட்டுடன் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். இத்தனை நாள் காத்திருந்ததும், போராடியதும் இதற்குத்தானே என்பதாய் என் மனநிலை இருக்கும். வாழ்க்கையின் அதி உன்னத கணத்தில் வாழ்வதாய் மகிழ்வேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும், முதல் நாள் படப்பிடிப்பைப் போன்றே மிகுந்த உற்சாகத்தோடு அணுகுவேன். அப்படியே ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். ஆயினும், ஒரு சில நாட்கள் பதட்டம் நிறைந்ததாக இருந்துவிடுகின்றன. அத்தகைய நாட்களில் என் மனம் பெரும் போராட்டத்திற்க்கு ஆளாகும்.. உதவியாளராக இருந்த காலங்களில் அத்தகைய நாட்களைக் கடந்து வந்திருக்கிறேன். ஒளிப்பதிவாளராக உயர்ந்த பிறகு அப்படியான நாட்கள் மிக அரிதானவையே!ஆனால், தற்போது பணிபுரிந்துக்கொண்டிருக்கும் படமான ‘தொட்டால் தொடரும்’ திரைப்படத்தின் அண்மைக்காலப் படப்பிடிப்பில் அத்தகைய நாட்களைக் கடக்க வேண்டியிருந்தது... ஒரு திரைப்பட உருவாக்கத்தில் பல தொழில்நுட்பாளர்கள் பங்கு பெறுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்