முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Phantom என்னும் அதிவேகக் கேமரா

நாம் வழக்கமாக நொடிக்கு 24 frames (24fps) என்ற கணக்கில் திரைப்படம் எடுக்கிறோம். அதை அப்படியே நொடிக்கு 24 frames-ஆக திரையிடும்போது செயல்கள் இயல்பாக இருக்கிறது. Slow motion என்பது நொடிக்கு 48frames (48fps) அல்லது அதற்கு மேலாக 150fps வரை (ARRI 435-இல் எடுக்கலாம்) எடுத்து, 24 frames-ஆகத் திரையிடும்போது செயல்கள் மிக மெதுவாக இருக்கும். நீங்கள் பார்த்திருப்பீர்கள் நம் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளில் கதாநாயகன் வில்லனை ஓடிவந்து உதைப்பது, ஓங்கிக் குத்துவது என Slow motion-னில் பார்த்திருப்பீர்கள். அதேபோல் நொடிக்கு 1000 frames (1000fps) என்ற அளவில் எடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். நம்முடைய செயல்கள் எல்லாம் இன்னும் மெதுவாக இருக்கும். மழை பொழிவது, கண்ணாடி கீழே விழுந்து உடைவது என பல செயல்களைத் தெளிவாக, ரசனையாகத் திரையில் பார்க்கமுடியும். அப்படி படம் எடுக்க 'Phantom' என்னும் இந்தக் கேமரா உதவும்.