முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான்கு செய்தியாளர்களும் ஒரு போர்களமும்

உலகம் இன்று செய்திகளால் நிரம்பி வழிகிறது. நடப்புகள் அனைத்தும் செய்தியாக்கப்படுகின்றன. ஏதோவொரு ஊடகத்தில் அவை பதிவு செய்யப்படுகின்றன. போட்டிகள் நிறைந்த இத்துறையில், பரபரப்பான செய்திகள் தேவைப்படுகின்றன. சுடச்சுட பரிமாறப்பட வேண்டியது அவசியமாகிறது. தவறும் ஒவ்வொரு கணமும், அது செய்தியைச் சாகடித்து விடக்கூடும். ஒவ்வொரு செய்தியாளனும், பத்திரிக்கையாளனும் சந்திக்கும் நெருக்கடிகள் ஏராளம். துறைசார்ந்த நெருக்கடிகள் ஒருபுறமென்றால், அறம் சார்ந்த நெருக்கடிகள் மறுபுறம். மற்ற எந்த வேலையை விடவும் பத்திரிக்கையாளனாக தன் பணியை தேர்ந்தெடுக்கும் ஒரு தனிமனிதனின் அறம் சார்ந்த கடமை மிக முக்கியமானது. உயிர் காக்கும் மருத்தவருக்கு இருக்கும் அதே கடமையும் பொறுப்பும் ஒரு பத்திரிக்கையாளனுக்கு உண்டு. சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே. ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மையோர் பத்திரிக்கையாளனாகத் தங்கள் பணியைத் தேர்ந்தெடுப்பது ஒருவித பொறுப்புணர்வினால்தான். சமூகத்தின் மீதிருக்கும் பொறுப்பும் அக்கறையுமே ஒரு மனிதனைப் பத்திரிக்கையாளனாக (நல்ல) மாற்றக்கூடும். ஒரு நடப்பைச் செய்தியாக்குவது எதற்காக? செய்திகளை உலகம் அறிய செய்வ