முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

About



திரைக்கலையின் உன்னதமான வடிவங்களில் ஒன்றான ஒளிப்பதிவின் மீது கொண்ட காதலால் திரைத்துறைக்குள் நுழைந்தவன். எழுதப்படுபவை, உணரப்படுபவை மட்டுமன்றி கனவுகளையும் கூட காட்சிப்படுத்த முடியும் என்று நம்பும் கலைஞர்களில் நானும் ஒருவன். பரந்து விரிந்து கிடக்கும் இந்த இயற்கையின் பேரழகோடு நம் மண்ணின் கலாச்சாரத்தை, பண்பாட்டை மாறுபட்ட காட்சியமைப்புகளுடன் என் காமிரா வழியே காண்பது என் பெருங்கனவு.அதனை நோக்கிச் செல்வதே என் பயணம்.

2000ல் ஆனந்தவிகடன் மாணவப் பத்திரிகையாளர்/புகைப்படக்காரராக துவங்கியது என் பணி. பின்னர் என் மதிப்புக்குரிய முன்னோடிகள் பாரதிராஜா, பி.கண்ணன், பி.லெனின், சி.ஜே.ராஜ்குமார், துவாரகநாத், சித்தார்த் ஆகியோரிடமிருந்து தமிழ் சினிமாவின் பக்கங்களைப் படித்தேன். அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை ‘பொம்மலாட்டம்’, ‘ஆட்டோகிராஃப்’, ‘யாரடி நீ மோகினி’, ‘வரலாறு’, ‘கனவு மெய்ப்படவேண்டும்’ போன்றன.

அதே காலகட்டங்களில் பல்வேறு விளம்பரப்படங்கள், ஆவணப்படங்களின் ஒளிப்பதிவை மேற்கொண்டேன். தொடர்ந்தது 2009ல் ஒளிப்பதிவாளராக என் முதல் படம், ராஜேஷ்லிங்கம் இயக்கிய ‘புகைப்படம்’. அதன்பின் 2010ல் நந்தா பெரியசாமி இயக்கிய ‘மாத்தி யோசி’. இரண்டுப்படங்களும் ஒளிப்பதிவு சார்ந்து வரவேற்பையும், நல் விமர்சனங்களையும் பெற்றுத்தந்தன.

ஓவியங்களும், இசையும், பயணங்களும் என் மனதுக்கு மிகவும் பிடித்தமானவை, புத்தகங்கள் என் மனதுக்கு நெருக்கமானவை. சொல்லப்படவேண்டிய கதைகள் ஏராளம் இருக்கின்றன என்பதை நம்புகிறேன். தமிழ்ச்சூழலில் எழுத்துக்கும், திரைக்கும் இடையே இருக்கும் இடைவெளி உறுத்தலானது. அதைத் தகர்க்க முயலும் அணியின் பக்கம் நான் இருக்க எப்போதும் விழைகிறேன்.




------------------------------------------------------------------------------------------------------




Vijay Armstrong is a clean, crisp, stylish and eloquent speaker. But his language transcends age, gender, language and national boundaries and can be understood by one and all. His language has no words, no phonetics, no written script but touches/moves/speaks to people across cultures.

His Language- Images

and

The medium- his camera.

He has been commended by his co-workers and directors for being a natural eye behind the camera. His ability to understand the director’s vision and at the same time use lights, locations and subjects to bring characters to life and capture not only their performance but also the soul of the film into the camera has earned him rave reviews. 

His works include:

'Nila Nila Odi Vaa'
Tamil Web Series (First Season Launched in VIU App)
Directed by Nanthini.J.S

'AZHAGU KUTTI CHELLAM'
Tamil Feature Film
Directed By Charles

'BHUDDAN YESU GANDHI'
(in shooting) Tamil Feature Film
Directed By Vetrivel

·     ONDIPULI” Tamil Feature Film
Directed By Rajaguru
·     “MATHI YOSI” Tamil Feature Film
Directed By Nantha Priyasamy
·     “POGAIPADAM” Tamil Feature Film,
Directed by Rajesh Lingam former asst. to Dir.Selvaragavan.
·     I.L.O( International Labour Organization ) about the Child labour.
·     “CHEDIYUM SERUMIUM” Tamil Short Film.
Directed by “Editor B.Lenin” National Wide Acclaimed Editor and National Award Winning Director.
·     “ENDLESS LOVE” Hindi/English Short Film.
Directed by “Janagi Viswanathan” National Award Winner for her Debut Film “Kutti”.
·     “DOTS – THE CURE FOR SURE” English Docu-Drama.
Directed by “ Janagi Viswanathan”

Prior to this, he gained specialist knowledge and hands-on experience in the Cine field by working as an assistant/associate for leading camera-men including Mr. B. Kannan, Mr. Sidharth, Mr. Moorthi, Mr. C.J. Rajkumar, Mr. S.R. Kathir and Mr. Dwaraganath. In a relatively short amount of time, he earned the respect of artists, directors, cameramen, photographers, and technicians alike. A detailed list of his work is given below:

Associate Cinematographer
·     “CINEMA” Hindi Film Associated to Mr.B.Kannan, Cinematographer.
Directed by “Mr.Barathi Raja”
·     “YARADI NEE MOGINI” Associated to Mr.Sidharth, Cinematographer.
·     “Varalaru” Associated to Mr.Moorthi, Cinematographer.
·     “IYYAR I.P.S” Tamil Film.Associated to Mr.B.Kannan, Cinematographer. Directed by “Mr.Mangai Harirajan”
·     “KANAVU  MAI PADA VENDUM” Tamil Film. Associated to “Mr.C.J,Rajkumar”, Cinematographer.Directed by “ Mrs. Janagi Viswanathan” National Award Winner for her Debut Film “Kutti”.
·     “ JOCKPOT” Hindi Film.Associated to “Mr.S.R.Kathiir”, Cinematographer. Directed by “Mr.Sameeth Badkar”.
·     “KOVAI EXPRESS” and “PERMAL SAMY” Tamil Film.
Associated to “Mr.B.Kannan”, Cinematographer. Directed by “Mr.Elango” and “Mr.Mangai Harirajan”

Assistant Cinematographer
“AUTOGRAPH” Tamil Film. Assist to “Mr.Dwaraganath” , Cinematographer. Directed and Acted by “Mr.Cheran”

His Beginnings
Vijay got into the creative art at a rather young age. Though he started out with a law degree, he kept his passion for creativity/images alive with a diploma in multimedia. His stint as a student photo journalist for the Vikatan Group and his job as a ‘Graphic and Web Designer’ for Digit Net Communications Bangalore only served to feed his creative vision and hunger. But throughout all this, he was always looking out for something more- A canvas that could take his visual story-telling to the next level.

He next dabbed into ad films- He has a wide repertoire of high-profile clients who have time and again marveled at his creativity and professionalism. He has worked as a main camera man and as an associate for over 50 ad films including “Murugan Idly” , “ S.M.Silks” , “ Jayachandiran Textiles ”, “Nallur Kumaran Silks, Canada”, “Sri Lakshmi Jewellery, Thiruchi”, “ Sumangali Jewellery, Kovai” , “Chennai Silks” and “TCDS Computer Education”.

His skills behind the camera soon got him several assignments including work for over 15 documentaries including the BBC documentary about PT Usha and another one for the ILO. He has also worked on a music video ‘Timeless Classics’ – A Malayalam album directed by Mr.Jayaram.

For him, it’s not about fame or being known or getting awards. It’s about doing everything he loves to do and sharing his passion with the world.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...