கிருஸ்டோபர் நோலன் எப்போதும் நம்மை ஏமாற்றியதில்லை. இம்முறையும் அப்படியே. ‘The Dark Knight Rises’ மூலம், தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் நிரூபிக்கிறார். சத்யத்தில் காலை 9.30 மணிக்காட்சியில் படம் பார்த்தேன். இப்போது இந்தக் கணம் வரை படத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. நோலன், பல செய்திகளை இப்படத்தில் வைத்திருக்கிறார். முதல் பாகமான ‘Batman Begins'-இல் துவங்கிய இப்பயணம், இதில் சரியான ஒரு முடிவை அடைகிறது. முதல் பாகத்தில் அறிமுகமான கதாப்பாத்திரங்கள் மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவங்களும், குறிக்கோளும், வழிமுறையும், லட்சியமும் இப்படத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. தீயவர்களின் கூடாரமாகியிருந்த தன் நகரைச் சுத்தப்படுத்த பல நிலைகளை பேட்மேன் கடந்து வரவேண்டியதிருந்தது. முந்தைய இரண்டு பாகங்கள் அதைத்தான் விவரித்தன. தான் உருவாக்கிய அமைதி, நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதனால், தானே கொலைகாரன் என்ற பழியைச் சுமந்து தப்பி ஓடும் பேட்மேனை, இரண்டாம் பாகமான ‘The Dark Knight’-இன் இறுதியில் பார்க்க முடியும். அதன் பிறகு பேட்மேனின் தேவைய...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!