முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே.வி.ஆனந்த் எனும் ஒளிக்காதலன்

  ‘ காதல் தேசம் ’ திரைப்படம் வெளிவந்த போது , நான் பெங்களூரில் , கல்லூரிப்படிப்பில் இருந்தேன் . வருங்காலத்தில் ஒளிப்பதிவாளராக வரவேண்டும் என்ற எண்ணத்தை , பனிரெண்டாம் வகுப்பு படித்த காலத்தில் வெளியான ‘ பம்பாய் ’ திரைப்படத்தின் மூலமாக , அதன் ஒளிப்பதிவாளர் திரு . ராஜிவ்மேனன் அழுத்தமாக என்னுள் ஏற்படுத்தி இருந்தார் . அதன் பின்பு ஒளிப்பதிவு குறித்து என் தேடல் இருந்த காலம் அது .  அக்காலகட்டத்தில்தான் ‘ காதல் தேசம் ’ வெளியாயிற்று . படம் பார்த்து மிரண்டு போனேன் . அட்டகாசமான ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது .  இருநாயகர்களும் தங்கி இருக்கும் அறை , அதன் சன்னல் , அதன் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய டேபில்ஃபேன் , அதன் பின்னால் பாய்ந்து வரும் ஒளி , பாடல்காட்சிகள் , குறிப்பாக ‘ முஸ்தபா முஸ்தபா ’ பாடல் , அதில் படம் பிடிக்கப்பட்டிருக்கும் மலை முகடுகள் என பரவசமான ஒரு உணர்வை அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு கொடுத்தது . அதன் பிறகுதான் , யார் அந்த ஒளிப்பதிவாளர் என கவனித்தேன் .  பெயரை பார்த்த போது , ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருசேர வந்தத

Family Man 2:

முதல் பாகத்திலிருந்து பார்த்தேன் .  தீவிரவாதத்தைத் தடுக்கும் அதிகாரியும் , அவர்தம் வாழ்வும் . இந்த டெம்ப்லெட் , உலக சினிமா வரலாற்றில் அரதபழசானது , என்றாலும் சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள் . சிறப்பான எழுத்து , ஆக்கம் . இரசிக்கலாம் .  இரண்டாம் பாகத்தின் பரபரப்பான சண்டைக்காட்சிகள் , இரண்டு சீசனிலும் கதாப்பாத்திரங்களின் பரஸ்பர அன்பு , நட்பு , உறவுகளை காட்சிப்படுத்தியவிதம் , ஒளிப்பதிவு , படத்தொகுப்பு என பல்வேறு நுட்பங்களை பாராட்டலாம் .  முதல் சீசனில் , இஸ்லாமிய தீவரவாதம் . பாகிஸ்தானும் , காஷ்மீரியர்களும் பலி ஆடுகள் . இரண்டாம் பாகத்தில் விடுதலைப்புலிகளும் , தமிழர்களும் .  ஆட்டம் சுவாரசியமாக இருப்பதற்காக , தகுடுத்தத்தம் செய்யக்கூடாது . வெகுசன சினிமா , பொழுதுபோக்கு என்றாலும் பொய்ப்பேசக்கூடாது , அவதூறு செய்யக்கூடாது . வெகுசன புத்தி என்பது , மீடியாக்களால் கட்டமைக்கப்படுவது . உண்மையோ பொய்யோ , அரசும் மீடியாவும் விரும்பும் திசையிலேயே பொதுபுத்தி சிந்திக்க வைக்கப்படுகிறது . எனில் , கலையின் பணி என்ன ? அதற்கு தூபம் போடுவதா ? அரைத்த