முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒளிக்கு மனம் உண்டு…!

  புகைப்படம் ,  கானொளி   ஆகிய   இரு   காட்சிமொழி   ஊடகங்களும் ,  ஒளியைகொண்டே   இயங்குகின்றன .  ஓவியருக்கு   வண்ணங்கள் ,  கவிஞருக்கு   வார்த்தைகள்   எப்படியோ …  அப்படித்தான் ,  ஒரு   புகைப்படக்காரனுக்கும் ,  ஒளிப்பதிவாளனுக்கும்  ‘ ஒளி ’  அவசியமாகிறது .  வண்ணத்தை ,  வார்த்தையை   முறையாக ,  நேர்த்தியாக   கையாளத்தெரிந்திருக்க   வேண்டியது   எத்தனை அவசியமோ …  அத்தனை   அவசியம்  ‘ ஒளியை ’  கையாளத்தெரிந்து   வைத்திருப்பதும் .  ஒளிக்கு   நிறம்   உண்டு …  நாம்   அறிவோம் .  ஒளிக்கு   மனமும்   உண்டு …  அறிந்ததுண்டா ? ஆம் …  ஒளிக்கு   மனம்   உண்டு .  ஒளியின்   தன்மை ,  அதன்   அடர்த்தி ,  அதன்   அளவு ,  அதன்   வண்ணம்   கொண்டு …  உங்கள்   மனநிலையை   மாற்றி அமைக்கும்   வல்லமை   ஒளிக்கு   உண்டு .  இசை   எப்படி   உங்கள்   மனநிலையை   பாதிக்கின்றதோ ,  அதுபோலவே   ஒளியும்   பாதிக்கும் .  எளிய   உதாரணங்கள்   பார்க்கலாம் … நண்பகல்   வெய்யல் ,  உச்சந்தலைக்கு   மேலே   சூரியன் …  மாலை   அந்தி   சாயும்   நேரம் ,  சூரியன்   மறைவதற்கு   காத்திருக்கிறான் … இதில் …  நீங்கள் ,  எந்த   நேரத்தை   நடை   பயணத்திற்கு   தேர்