முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விஷூவல் எஃபெக்ட்ஸ் : ஒரு மாயத்தூரிகை (PART 3)

முந்தைய இரண்டு கட்டுரைகளில்,  ‘VFX’ – இன் முன்னோடி தொழில்நுட்பங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்க்கலாம். முந்தைய கட்டுரைகளைப் படிக்காதவர்கள் படித்துவிட்டு வந்துவிடுங்கள். விஷூவல் எஃபெக்ட்ஸ் : ஒரு மாயத்தூரிகை (PART 1) விஷூவல் எஃபெக்ட்ஸ் : ஒரு மாயத்தூரிகை (PART 2) The Matrix — Bullet Time: 1999-இல் ‘The Matrix’ திரைப்படம் வெளியானபோது, அது பார்வையாளர்களை வேறொரு அனுபவத்திற்கு அழைத்துச் சென்றது. இதுநாள் வரை நாம் பார்த்து வந்த ‘Slow Motion Shot’ அனுபவத்தை இப்படம் முற்றிலுமாக மாற்றியது. ‘Slow Motion’ என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வழக்கமாக நொடிக்கு 24 ஃப்ரேம்களில் திரைப்படம் எடுக்கப்படுகிறது என்பதும், அதை நொடிக்கு 24 ஃப்ரேம்களில் திரையிட்டு காட்டுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். இது பொதுவாக பின்பற்றப்படும் நுட்பம். அதையே, 24 ஃப்ரேம்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் (48,60,90,120..etc) படம் பிடித்து அதை 24 ஃப்ரேம்களில் திரையிட்டால், அக்காட்சியில் நகரும் எதுவும் மெதுவாக நகர்வதாக தோன்றும் என்பதையும் நா