முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு

'RED ONE' கேமரா ஒரு அறிமுகம்

இன்றைய நிலவரப்படி காட்சியை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தில் பல வகைகள் இருக்கின்றன. ஃபிலிம்(Film), டிஜிட்டல்(Digital) என்ற இரண்டு பொதுப் பிரிவுக்குள் அவற்றை அடக்கிவிட முடிந்தாலும் அதற்குள்ளும் நிறைய பிரிவுகள் இருக்கின்றன. ஃபிலிம் என்று பொதுவாக அழைத்துவிட்டாலும், 65mm, 35mm, 16mm படச்சுருள்களில் எதைப் பயன்படுத்தினோம் என்பதைப் பொருத்து நம் காட்சியின் தரம் இருக்கிறது. ஒரு விதத்தில் இவை ஒவ்வொன்றுமே மற்றவற்றைவிட பாதியளவு தர வித்தியாசம் கொண்டவை. ஒரு பிம்பம் பதிவுசெய்யப்படும் பரப்பளவு சார்ந்து தரம் வித்தியாசப்படும் என்பது நாம் அறிந்ததுதான். அதாவது 65mm ஃபிலிமை விட 35mm ஃபிலிம் என்பது பாதி அளவு சிறியது, அதனால் பிம்பம் பதியப்படும் பரப்பளவு குறைகிறது. அதைச்சார்ந்து 'Image resolution' குறைகிறது. இது பிம்பதின் காட்சித் தரத்தைக் குறைக்கும். இதேதான் 35mm ஃபிலிமுக்கும் 16mm ஃபிலிமுக்குமான வித்தியாசம். என்றாலும் 35mm ஃபிலிமின் தரம் நமக்கு போதுமானது என்பதனால் 65mm ஃபிலிமை நாம் அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை, இடையில் சில வருடங்கள் பயன்படுத்தியதோடு சரி. (அகண்ட திரையில் பிரம்மாண்ட காட்சிகளைக

தலைவன் கொண்ட பாதை

உலகம் சந்தித்தப் பெரும் அழிவுகளில் ஒன்றான இரண்டாம் உலகப் போருக்கும், பதினேழு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதற்கும் காரணமாகயிருந்த 'அடால்ஃப் ஹிட்லர்' இரண்டாம் உலகப்போர் துவங்குவதற்கு முன்பே கொல்லப்பட்டிருந்தால், ‘ அக்கொலை, குற்றம் என கருதப்படுமா? ஹிட்லரைக் கொன்றவன் கொலைகாரனா? அல்லது நாயகனா?’  ஒரு விதத்தில் பெரும் அழிவைத் தடுத்ததாகவும், மறுவிதத்தில் சக மனிதனைக் கொல்வது குற்றம் என்றும் ஆகிறது. இதன்படி கொன்றவன் குற்றவாளியா? நாயகனா? என்றொரு கேள்வியை எப்போதோ ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன். அப்போது தோன்றியிருக்கிறது, அப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா என்று. ஹிட்லர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தால் இவ்வுலகம் பெரும் அழிவிலிருந்து தப்பித்திருக்கும் என்ற என் அறியாமையை இப்போது நினைத்து நொந்து கொள்கிறேன். ஹிட்லர் இல்லை என்றால் என்ன? அவரைப்போலவே அல்லது அவரை விட பல மடங்கு பலம் பொருந்திய கனவான்கள் பலர் உண்டு இவ்வுலகில் என்ற உண்மையை கடந்துபோன வருடங்கள் நமக்கு அடையாளம் காட்டியிருக்கின்றன. நினைத்துப்பார்க்க.. நன்றாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட தலைவர்களை மட்டும் கொல்ல மு

சுதந்திரத்தின் தூரம் நான்காயிரம் மைல்

நீண்ட நெடிய பயணம்தான் மனிதனின் இன்றைய பரிணாம நிலைக்கான காரணம். ஒரு செல் உயிரியாக இருந்து பரிணாம வளர்ச்சியில் இத்தனை தூரம் கடந்து வந்திருக்கிறோம். மனிதத் தோன்றலுக்கு மட்டுமில்லை, மனிதன் தன் உயிரைத் தக்க வைத்துக்கொள்வதற்கும், சுதந்திரமாக வாழ்வதற்கும் கடந்து வந்த தூரங்கள் அதிகம். 'வாழ்க்கை என்பது ஒரு பயணம்', 'இது ஒரு பயணம், அதன் பெயர் வாழ்க்கை' என்றெல்லாம் வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடும்போது சொல்கிறார்கள். சிலர் வாழ்க்கையில் பயணம் செய்கிறார்கள். சிலர் வாழ்க்கையைப் பயணமாகப் பார்க்கிறார்கள். இதெல்லாம் யாருக்கு சாத்தியமாகிறது என்றால், குறைந்தபட்சம் அல்லது அதிகபட்சமாக அவர்கள் உயிர்த்திருத்தலுக்கான உரிமை வழங்கப்பட்டிருப்போருக்கு. ஆனால் உயிர்த்திருத்தலுக்கே சாத்தியமில்லாத, அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டும், எந்த நேரத்திலும் பிணம் என்றழைக்கப்பட்டுவிடும் சாத்தியம் கொண்ட வாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டோர் பலர் கொண்ட உலகம் இது. அப்படித் தன் உரிமையை, உடமையை மட்டுமல்ல தன் உயிரையும் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் மக்களை நாம் அறிவோம். பல தேசங்கள் அப்படிப்பட்ட மக்களைக் கொண்டிருக்கின்ற

"அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை"

ஐரோப்பாக் கண்டத்தின் வட மேற்கில் 'அயர்லாந்துத் தீவு' அமைந்திருக்கிறது. இது அந்த கண்டத்தின் மூன்றாவது பெரிய தீவு. எழுநூறு ஆண்டுகளாக பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் சுதந்திரப்போராட்டம் 1798-லிருந்தே துவங்கி விட்டாலும். அதன் கடைசிக்கட்ட போராட்டம் என்பது 1916, ஈஸ்டர் நாளில் துவங்கப்பட்ட "Easter Rising" போராட்டத்திலிருந்து துவங்குகிறது. அது 'Irish Republican Brotherhood' என்ற இயக்கத்தினால் ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இந்தப்போராட்டத்தில் 'மைக்கேல் காலின்ஸ்' மிக முக்கிய பங்காற்றினார். அதன் தோல்விக்குப் பிறகு 1917-இல் 'Sinn Féin' என்ற கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 'எமோன் தேவ் வலிரா' அதன் தலைவர். காலின்ஸ் 'கெரில்லா போர்' முறையைக் கொண்டு தன் போராட்டத்தை நடத்தத் துவங்கினார். இவரின் 'கெரில்லா போர்' முறைகள் பிற்காலத்தில் பல நாட்டு போராட்டங்களில் பின்பற்றப்பட்டன. சீனாவில் 'மாவோ', இஸ்ரேலில் 'இட்சாக் ஷமிர்' (Yitzhak Shamir) போன்றவர்களால் பின்பற்றப்பட்டது. மைக்கேல் காலின்ஸ் ஒரு சிறு குழுவைக்கொண்டே தன

Canon 5D/7D HD Movie Post-Production: அறிமுகம்

Canon 5D/7D HD movies பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விபரங்கள்: 1. 'Quicktime movies' ஆக சேமிக்கப்படுகிறது. அதாவது .mov கோப்பாக (.mov format). 2. 'H.264' codec-இல் என்கோடு (encode) செய்யப்படுகிறது. 3. இந்த 'movie'-ஐ 'Quicktime Player'ஐ பயன்படுத்திப் பார்க்கலாம். 4. 'FCP' அல்லது 'AVID' இல் அப்படியே நேரடியாக எடிட் செய்யமுடியாது. ஏனெனில் இந்த 'H.264' கோடக் என்பது 'Compressed' கோப்பு (file). 5.'FCP'இல் எடிட் செய்ய 'Apple ProRes' கோடக்காக மாற்றவேண்டும். (Uncompressed file) 6.'AVID'இல் எடிட் செய்ய 'DNxHD' கோடக்காக மாற்றவேண்டும். 7. இந்த HD Movie-களில் 'Time Code' கிடையாது. ஆனால் இப்போது 'Canon FCP plug- in' கிடைக்கிறது. இதைப்பயன்படுத்தி 'டைம் கோட்' உருவாக்கிப் பயன்படுத்தமுடியும். ஆனால் இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தவறானால் மொத்த 'HD Movie'யும் பயனற்றுப் போய்விடும். Canon 7D பற்றி சில தகவல்கள்:   இதில் HD movi