முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Canon 5D/7D HD Movie Post-Production: அறிமுகம்

Canon 5D/7D HD movies பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விபரங்கள்:

1. 'Quicktime movies' ஆக சேமிக்கப்படுகிறது. அதாவது .mov கோப்பாக (.mov format).


2. 'H.264' codec-இல் என்கோடு (encode) செய்யப்படுகிறது.


3. இந்த 'movie'-ஐ 'Quicktime Player'ஐ பயன்படுத்திப் பார்க்கலாம்.


4. 'FCP' அல்லது 'AVID' இல் அப்படியே நேரடியாக எடிட் செய்யமுடியாது. ஏனெனில் இந்த 'H.264' கோடக் என்பது 'Compressed' கோப்பு (file).


5.'FCP'இல் எடிட் செய்ய 'Apple ProRes' கோடக்காக மாற்றவேண்டும். (Uncompressed file)


6.'AVID'இல் எடிட் செய்ய 'DNxHD' கோடக்காக மாற்றவேண்டும்.


7. இந்த HD Movie-களில் 'Time Code' கிடையாது. ஆனால் இப்போது 'Canon FCP plug- in' கிடைக்கிறது. இதைப்பயன்படுத்தி 'டைம் கோட்' உருவாக்கிப் பயன்படுத்தமுடியும். ஆனால் இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தவறானால் மொத்த 'HD Movie'யும் பயனற்றுப் போய்விடும்.


Canon 7D பற்றி சில தகவல்கள்: 

இதில் HD movies '1080p' அல்லது '720p' இல் உருவாக்கப்படுகிறது. அதாவது '1080','720' என்பது '1920X1080','1280x720' பிக்சல் ரேஷியாவையும் 'p' என்பது 'progressive' விடியோ என்பதையும் குறிக்கிறது.


('progressive' or 'Interlace' என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ள 'அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்' என்னும் கட்டுரையைப் பார்க்கவும்)


நொடிக்கு 24,25,30,50 மற்றும் 60 ஃபிரேம்களாக (frames) படம் பிடிக்கமுடியும்.


இதில்..

24fps என்பது திரைப்படம் ஓடும் ஃபிரேம்களின் எண்ணிக்கை.
25fps என்பது 'PAL' விடியோ முறையில் இருக்கும் ஃபிரேம்களின் எண்ணிக்கை.
30fps என்பது 'NTSC' விடியோ முறையில் இருக்கும் ஃபிரேம்களின் எண்ணிக்கை.

('PAL' மற்றும் 'NTSC' பற்றி அறிய இந்த கட்டுரையைப் பார்க்கவும்)


50fps மற்றும் 60fps என்பது அதிக ஃபிரேம் எண்ணிக்கையில் படம்பிடிப்பது. இதன் மூலம் 'Slow Motion' படம் கிடைக்கும். அதாவது இந்த 50fps மற்றும் 60fps மூவிகளை 24fps கோப்புகளாக மாற்றிப் பயன்படுத்த வேண்டும். இதை கேமராவிலேயே செய்ய முடியாது. அதை கணினியில் தான் செய்ய வேண்டும். அது எப்படி என்று தெரிந்துக்கொள்ள இந்தத் தளங்களுக்குச் செல்லவும்.


http://www.suite101.com/content/creating-proper-slow-motion-with-the-canon-7ds-60-fps-function-a306106


http://philipbloom.net/tutorials-1/how-to-turn-50p-and-60p-into-slow-motion-with-cinema-tools/



24,25,30,50 மற்றும் 60 ஃபிரேம்கள் என்பது ஒரு சௌகரித்திற்காக சொல்லப்படுவது. உண்மையில் அவை..

24 என்பது 23.976 fps
25 என்பது 25 fps
30 என்பது 29.97 fps
50 என்பது 50 fps
60 என்பது 59.94 fps


இந்த மூவிகளை சேமிக்க 'மெமரி கார்டில்' எவ்வளவு இடம் தேவை?


1920x1080 - 24, 25 or 30fps இல் சேமித்தால்..
4GB கார்டில் 12 நிமிடம்.
16GB கார்டில் 49 நிமிடம்.
அதாவது நிமிடத்திற்கு 330 MBytes/min, ஒரு மணிநேரத்திற்கு 19.33 GBytes/hr
1 TB 'ஹார்ட்டிஸ்கில்' 50 மணிநேர படம் சேமிக்கலாம்.


1280x720 - 50fps அல்லது 60fps இல் சேமித்தால்..
4GB கார்டில் 12 நிமிடம்.
16GB கார்டில் 49 நிமிடம்.
அதாவது நிமிடத்திற்கு 330 MBytes/min, ஒரு மணிநேரத்திற்கு 19.33 GBytes/hr
1 TB 'ஹார்ட்டிஸ்கில்' 50 மணிநேர படம் சேமிக்கலாம்.


640x480 - 50fps அல்லது 60fps இல் சேமித்தால்..(தொலைக்காட்சிக்கு போதுமான ஃபிக்சல் ரேஷியோ)
4GB கார்டில் 24 நிமிடம்.
16GB கார்டில் 99 நிமிடம்.
அதாவது நிமிடத்திற்கு 165 MBytes/min, ஒரு மணிநேரத்திற்கு 9.9 GBytes/hr
1 TB 'ஹார்ட்டிஸ்கில்' 95 மணிநேர படம் சேமிக்கலாம்.




இந்த விடியோக்களை படத்தொகுப்பு (எடிட்) செய்வதற்கு முன்னால் கவனிக்க வேண்டியவைகள்:


FCP-இல் படத்தொகுப்பு செய்ய 'H.264' விடியோக்களை 'Apple ProRes' விடியோக்களாக மாற்ற வேண்டும்.


'Apple ProRes' கோடக் ஐந்து வகையில் இருக்கிறது. அதில் மூன்று முக்கியம் வாய்ந்தவைகள். அவை ProRes, ProResHQ மற்றும் ProRes 4444.


Canon HD விடியோக்களை 'Apple ProRes' கோப்புகளாக மாற்றும்போது, அவை எடுத்துக்கொள்ளும் சேமிப்பு இடம்..


-ProRes - 1080p24 takes up 53 GB/hr or 18 hrs per 1 TB drive.
-ProResHQ - 1080p24 takes up 79 GB/hr or 12 hrs per 1 TB drive.
-ProRes4444 - 1080p24 takes up 119 GB/hr or 8 hrs per 1 TB drive.


Avid-இல் படதொகுப்பு செய்ய 'DNxHD' கோடாக் விடியோவாக மாற்றவேண்டும்.


Canon HD விடியோக்களை 'DNxHD' கோப்புகளாக மாற்றும்போது, அவை எடுத்துக்கொள்ளும் சேமிப்பு இடம்..


-DNxHD 175x - 1080p24 takes up 49 GB/hr or 19 hrs per 1 TB drive.
-DNxHD 115 - 1080p24 takes up 74 GB/hr or 13 hrs per 1 TB drive.


இப்படி விடியோ கோடக்குகளை மாற்றுவதின் மூலம் விடியோ தரத்தில் மாற்றம் வராது. ஆனால் படத்தொகுப்பு செய்வதற்கு சுலபமாக இருக்கும். வண்ண ஒழுங்கமைத்தலிலும் (Color Correction) நிறைய சாத்தியங்களைக் கொடுக்கும்.




'DI'க்கு கொண்டுச்செல்லும் போது 'Image Sequences (PNG,JPG..etc)'ஆக கொடுக்கலாம். நான் அப்படிதான் செய்தேன்.


நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று. 5D/7D விடியோக்களில் 'டைம் கோட்' கிடையாது. அதனால் இப்படி கோடாக்குகளை மாற்றி படத்தொகுப்பு செய்யப்படும் விடியோக்களை நாம் அப்படியே 'Online' (முழு தரம்) விடியோக்களாக பயன்படுத்தலாம். 'Offline' 'Online' தேவையில்லை.


'Offline' 'Online' என்பது ஒரு தொழில்நுட்பமுறை. அதாவது ஒரு விடியோவை அப்படியே முழு தரத்தில் படத்தொகுப்பு கணினியில் சேமித்து படதொகுப்பு செய்யும் போது அந்த விடியோவின் 'file size' அதிகமாக இருப்பதினால் கணினியின் இயங்கும் தரம் அதிகமாக தேவைப்படும், கணினியின் செயல்திறன் மெதுவாகும், அதனால் படத்தொகுப்பு வேலையின் வேகம் குறையும்.


இதை தவிர்ப்பதற்கு விடியோக்களை குறைந்த தரத்தில் கணினியில் சேமித்து படத்தொகுப்பு முடிந்தபிறகு, படத்தில் பயன்படுத்தப்பட்ட, தேவையான 'shots'-களை மட்டும் 'Time code'ஐப் பயன்படுத்தி முழுத்தரத்தில் மீண்டும் கணினியில் ஏற்றி அதை இறுதி விடியோவாக பயன்படுத்துவார்கள். இந்த விடியோக்களையே வண்ண ஒழுங்கமைத்தலுக்கு பயன்படுத்தவேண்டும்.


தரம் குறைந்த விடியோவை (offline) என்றும் முழுத்தரம் கொண்ட விடியோவை (online) என்றும் அடையாளம் கொள்கிறோம். 


இப்படி செய்வதின் மூலம் தேவையற்ற நேர விரையத்தைத் தவிர்க்க முடியும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...