முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

லென்ஸ் & கம்போசிஷன் பயிற்சிப்பட்டறை

Learn Photography & Videography LENS & COMPOSITION Workshop  2 days @ Kotagiri - 30, 31st OCT - Sat, Sunday  Understanding camera lenses can help add more creative control to your Photography & Cinematography. Choosing the right lens for the task can become a complex trade-off between cost, size, weight, lens speed and image quality. This workshop aims to improve understanding by providing an introductory overview of concepts relating to image quality, focal length, perspective, prime vs. zoom lenses and aperture or f-number. Everything you need to know about camera lenses Choosing The Best Lenses For Filmmaking Lens Elements & Image Quality Composition  Type of Shots Depth Of Field Influence Of Lens Focal Length Focal Length And Sensor Size Influence Of Lens Aperture Or F-Number Magnification & Sensor Size Electronic Or Mechanical Focusing Focus Breathing Which Lenses To Buy? ₹ 5999/-  Full Price Offers: EARLY-BIRD DISCOUNT Offers - Pay

படைப்பாளியும் சமூகமும்:

ஒவ்வொரு தடவையும் இது நிகழ்கிறது . ‘ யாரேனும் ’ ஒரு படைப்பாளி மறைந்து போகும் போதெல்லாம் இந்த பேச்சி வெளிவருகிறது .  ‘ படைப்பாளியை , கலைஞனை சமூகம் கொண்டாட வேண்டும் . அவனை , அவன் படைப்பின் மூலமாக மட்டுமே அடையாளம் காண வேண்டும் . அவனுடைய வாழ்வு , முழுக்க முழுக்க அவனுடைய தனிப்பட்ட விஷயம் , அதிலிருக்கும் கீழ்மைகளை , குறைகளை , வாசகன் அல்லது ரசிகனுக்கு அநாவசியமானது , கண்டுக்கொள்ள வேண்டியதில்லை ’ என்பதாக , பேச்சுகள் , விவாதங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது .  ‘ யாரேனும் ’ ஒரு படைப்பாளி , என்று நான் குறிப்பிடுவதில் இருக்கும் ‘ யாரேனும் ’ என்ற பதத்தை நான் கவனத்தோடுதான் எழுதுகிறேன் . காரணம் , பிரபலமான படைப்பாளிகள் மரணிக்கின்ற பொழுது இத்தகைய பேச்சுகள் எழுவதில்லை . பிரபலம் அல்லாத , மரணிக்கின்ற வரையில் பெரும்பாலான வாசகனை , ரசிகனை சென்றடையாத படைப்பாளி , கலைஞன் மறைவின் போதுதான் இந்தப் பிரச்சனை எழுகிறது .  யார் அவர் ? என்று கேட்டும் அளவிற்கே , அவர்களுடைய படைப்பும் , எழுத்தும் வாசகனை , ரசிகனை சென்றடைந்திருக்கிறது . அதற்கு யார் காரண

நன்றி: குறும்படம் எடுப்பது எப்படி? - பயிற்சிப்பட்டறை - ஏற்காடு - 24, 25, 26 செப்டம்பர் 2021

மூன்று நாட்கள் நடந்த பயிற்சிப்பட்டறை சிறப்பாக நிறைவுற்றது . தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்பாளர்கள் வந்திருந்தார்கள் . பலத்துறைகளில் பணிபுரிபவர்கள் என்ற போதும் , எல்லோருக்கும் திரைப்படம் , குறும்படம் குறித்து ஆர்வம் இருந்தது . மிகுந்த சிரத்தையோடு கற்றுக்கொண்டார்கள் . முதல் நாள் … கதை , திரைக்கதை , காட்சிகள் , ஷாட்டுகளை பிரிப்பது பற்றிய விளக்கங்கள் மற்றும் ஒளி , ஒளியமைப்புக்குறித்த வகுப்பாக துவங்கியது பயிற்சிப்பட்டறை . பிறகு மாலையில் துவங்கி இரவு 9 மணிவரை காட்சிகளை படம்பிடித்தோம் . இரவும் படத்தொகுப்பு செய்யப்பட்டது . இரண்டாம் நாள் காலை , முந்தைய நாள் எடுத்த காட்சிகளை படத்தொகுப்பு செய்ததைப் பார்த்துவிட்டு , அன்றைய பொழுது முழுவதும் படபிடிப்பு நாளா மாற்றினோம் . அன்று இரவு , அதுவரை எடுத்த காட்சிகளை அனைவரும் அமர்ந்து படத்தொகுப்பு செய்துப்பார்த்தோம் . இரவு 11 மணி வரை சென்றபோதும் , அத்துணை பேரும் ஆர்வமாக கலந்துக்கொண்டதை கண்டு , மனம் நிறைந்தது . மூன்றாம் நாள் … விடியற்காலையிலேயே (6am) படப்பிடிப்பை துவங்கிவிட்டோ

குறும்படங்களும் அதன் தேவையும்:

தற்போதெல்லாம் குறும்படம் எடுப்பது என்பது , ஒரு வணிகப்படத்தைப் பெறுவதற்கான வாய்ப்பாக … நுழைவுச்சீட்டாகத்தான் பார்க்கப்படுகிறது . இரண்டரை மணிநேரப்படத்தை சுருக்கி ஒரு குறும்படமாக அதனை காட்டி , பெரும்படத்தை பெற்றுவிடுவது நோக்கம் .  இது பலருக்கும் கைக்கொடுத்திருக்கிறது . கார்த்திக் சுப்புராஜ் , நளன் குமாரசாமி , லோகேஷ் கனகராஜ் … என்று பெரும் பட்டியலே இருக்கிறது . சொல்லப்போனால் , திரைத்துறையில் இருப்பவர்களே , அதைத்தான் கேட்கிறார்கள் . ஒரு கதையைச் சொன்னால் , அதனை ஒரு குறும்படமாக எடுத்துக்கொண்டு வாருங்களேன் , பார்க்கலாம் என்கிறார்கள் . காரணம் , சொல்லும் கதையை , திரையில் கடத்த அவருக்கு வருகிறதா ? என்று கண்டு கொள்வதற்காக .  இது ஒருவிதத்தில் நன்மை பயக்கக்கூடியதுதான் . இன்னொரு விதத்தில் , சிக்கலானதும் கூட … பொருளாதார குறை , அதனால் ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடு , நடிகர்களின் திறமை இன்மை , இடம் , கலை சார்ந்த போதாமை என பல்வேறு குறைகளைக் கொண்ட படைப்பாக அது வெளிப்பட்டு , அதனால் தடைபட்டு விடும் வாய்ப்பு என இருமுனை கத்தியாக இருக்கிறது . ச