முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Lumix S1 & S1R Test Footages

ஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது .? ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்தும்போது , அக்கேமராவிற்கென பல்வேறு சிறப்பு அம்சங்களை குறிப்பிடுகின்றன . அவற்றை முறையாக பரிச்சித்து பார்த்து புரிந்துக்கொள்வது அவசியமாகும் .  லிட்டருக்கு இத்தனை கிலோடு மீட்டர் கொடுக்கும் என்று ஒவ்வொரு இருசக்கர / நான்கு சக்கர வாகனங்களுக்கு அதன் நிறுவனங்கள் கொடுக்கும் வாக்குறுதியைப்போன்றதுதான் இதுவும் . அதாவது , முறையான , தரமான , சோதனைச் சாலையில் ஓடும் போது , அவர்கள் குறிப்பிடும் அளவில் மைலேஜ் கொடுக்கும் , பொது பயன்பாட்டிலிருக்கும் சாலையில் அவர்கள் கொடுக்கும் மைலேஜை எவ்வாகனமும் கொடுப்பதில்லை என்பதை நாம் அறிவோம் . அதேப்போலத்தான் இங்கேயும் … கேமரா நிறுவனங்கள் சொல்லும் , அத்தனை சிறப்பு அம்சமும் , எத்தனை சதவிதம் நடைமுறைக்கு ஒத்து வரும் என்பதை நாம்தாம் பரிச்சித்து அறிந்துக்கொள்ள வேண்டும் .  பொதுவாக , கேமராவை சோதிக்கும்போது .. அதன் அதிக பட்ச தாங்கும் திறனை சோதித்துப்பார்ப்பது என் வழக்க

Lumix S1H is the First Netflix Approved Mirrorless Camera:

டிஜிட்டல் போட்டோகிராஃபியில், முக்கியமான மாற்றங்கள் பல,  கடந்த சில வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கிறது. - முதல் மாற்றம், SLR, DSLR வரிசையில் இப்போது Mirrorless Cameras. 'Epson' நிறுவனம் 2004 இல் Mirrorless Camera-வைக் கண்டுபிடித்த போதும், 2008-இல் பேனாசோனிக் தன்னுடைய Lumix G1 மூலம் சந்தைக்கு கொண்டுவந்தது. இன்று வரை தொடர்ந்து Mirrorless கேமராக்களை சந்தைப்படுத்துகிறது. அண்மையில் தான் Canon மற்றும் Nikon நிறுவனங்கள் தங்களுடைய Mirrorless Camera கேமராக்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. Mirrorless Cameras தான் எதிர்காலம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். - இரண்டாவது .. கேமராக்களின் Sensor Size யுத்தம். ஒரு கேமராவிற்கு, 'சென்சார்' தான் அதன் உயிர்நாடி என்பதை நாம் அறிவோம். சிறிய சென்சார்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிய சென்சார்களை நோக்கி கேமரா நிறுவனங்கள் நகர்கின்றன. 1/3.2"(4.54mm x 3.42mm)) இருந்து Full Frame(36mm x 24mm) என்று சொல்லப்படும் பெரிய சென்சார் வரை மாற்றம் கண்டிருக்கிறது. இன்றைய தேதியில் Full Frame Sensor கேமராக்கள் தான் மார்கெட்டை தக்க வைத்துக்கொண்டிரு