முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Lumix S1 & S1R Test Footages



ஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது.?

ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்தும்போது, அக்கேமராவிற்கென பல்வேறு சிறப்பு அம்சங்களை குறிப்பிடுகின்றன. அவற்றை முறையாக பரிச்சித்து பார்த்து புரிந்துக்கொள்வது அவசியமாகும்

லிட்டருக்கு இத்தனை கிலோடு மீட்டர் கொடுக்கும் என்று ஒவ்வொரு இருசக்கர / நான்கு சக்கர வாகனங்களுக்கு அதன் நிறுவனங்கள் கொடுக்கும் வாக்குறுதியைப்போன்றதுதான் இதுவும். அதாவது, முறையான, தரமான, சோதனைச் சாலையில் ஓடும் போது, அவர்கள் குறிப்பிடும் அளவில் மைலேஜ் கொடுக்கும், பொது பயன்பாட்டிலிருக்கும் சாலையில் அவர்கள் கொடுக்கும் மைலேஜை எவ்வாகனமும் கொடுப்பதில்லை என்பதை நாம் அறிவோம். அதேப்போலத்தான் இங்கேயும்

கேமரா நிறுவனங்கள் சொல்லும், அத்தனை சிறப்பு அம்சமும், எத்தனை சதவிதம் நடைமுறைக்கு ஒத்து வரும் என்பதை நாம்தாம் பரிச்சித்து அறிந்துக்கொள்ள வேண்டும்

பொதுவாக, கேமராவை சோதிக்கும்போது.. அதன் அதிக பட்ச தாங்கும் திறனை சோதித்துப்பார்ப்பது என் வழக்கம். அதாவது..

  • பல்வேறு ஒளிகளில்
  • ஒரு நாளில் பல்வேறு பொழுதுகளில்
  • வெயில், மழை
  • குறைந்த ஒளி
  • மிருகங்கள், பறவைகள்
  • செடி, கொடி, மரம், வயல், கடல்
  • நீர், சூரியன், நிலா

முறையான, சரியான, நேர்த்தியான முறையில்.. அழகு நிறைந்த இடங்களை படமெடுத்தால் எந்த கேமராவும் அழகாத்தான் பதிவு செய்யும். அதிலிருந்து அக்கேமராவின் தகுதியை புரிந்துக்கொள்ள முடியாது. அதனால் தான், நாம் வாழுமிடத்திற்கு அருகிலிருக்கும், இயல்பான சூழலை படம் பிடித்து பார்த்திருக்கிறேன்

ஒரு கேமராவின் தகுதி என நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது.

  • Dynamic Range 
  • Colors
  • Contrast 
  • Auto Focus
  • Image Stabilisation 
  • Slow Motion Capability 
  • Low Light Recording 
  • Noise Level
  • Time lapse Recording  

இதைத்தான் இவ்வீடியோவில், சோதித்துப்பார்த்திருக்கிறேன்

என் அனுபவத்தில் Lumix S1 / S1R/ S1H கேமராக்கள்.. மிக அற்புதமான தரத்தை தருகின்றன. நண்பர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்துக்கொள்ளலாம்.




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...