முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் எப்படி ஒளிப்பதிவாளனானேன்..! (பாகம் 01)

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் கடைசி தேர்வை எழுதிவிட்டு .. பல மாதங்களாக கட்டுப்பாடாக படித்தக் க ளை ப்பு போக (!?), ஒட்டுமொத்தமாக பள்ளித்தோழர்கள் அனைவரும் , ஒரு திரைப்படத்திற்கு போனோம் . காலையில் தேர்வு முடிந்து , மதியம் திரைப்படம் .  கமல் நடிப்பில் , பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘ சதிலீலாவதி ’ திரைப்படம் அது . கமல் படம் .. கமல் ரசிகன் .. அதுவே போதுமானதாக இருந்தது , அப்படத்திற்கு போவதற்கு . சிரித்து சிரித்து மகிழ்ந்தோம் என்பது மட்டும் நினைவிலிருக்கிறது . படம் மதியம் 2.30 துவங்கி மாலை 5.30 மணிபோல் முடிந்தது . நண்பர்களுக்கு விடை கொடுத்தோம் . நெருங்கிய நண்பர்கள் நான்கு ஐந்து பேர் மட்டும் , மீதமிருந்தோம் . எங்களுக்கு தேர்வு முடிந்த க ளை ப்பு இன்னும் போகவில்லை . கலைப்பைப் போக்க வேறெதேனும் செய்ய வேண்டியதாக இருந்தது .  நீங்கள் கற்பனை செய்யும் அளவிற்கெல்லாம் .. அன்றை நாட்கள் இல்லை . எங்கள் கலைப்பை போக்க , எங்களை மகிழ்விக்க எங்களுக்கு அப்போது இருந்த ஒரே வழி , ஒரே மார்கம் .. திரைப்படம் பார்ப்பதுதான் . ஆகவே ..

புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 01)

மனித வரலாற்றில் , தொடர்ச்சியாகக் காணக்கிடைக்கும் ஒரு செயல் , பதிந்து வைத்தல் . மனிதன் தான் கண்டவற்றை , கடந்து வந்தவற்றை , உணர்ந்தவற்றை ஏதோ ஒரு ஊடகத்தைப் பயன்படுத்தி பதிந்து வைத்திருக்கிறான் காலம் தோறும் . ஆரம்பம் முதலே , குகை ஓவியமாக , சிற்பமாக , பாடலாக தன் வாழ்வை பதிந்து வைக்கும் பழக்கம் மனிதனுக்கு இருந்து வந்திருக்கிறது . தன் வாழ்வில் , தான் கடக்கும் சிறந்த கணங்களை , அனுபவத்தை , உணர்வைப் பதிந்து வைத்து , ரசிக்கும் பழக்கம் மனிதனுக்கு எப்படி உண்டாகிருக்கும் என்று யோசித்தோமானால் .. மனிதனுக்கு எல்லாமே கடந்த காலம்தான் . கடந்துபோன காலங்களை அவனால் கைவிடவே முடிவதில்லை . வாழ்க்கை என்பது நிகழ்காலத்தின் அடிப்படையில் நிகழ்வது . இந்த கணம் மட்டுமே அதற்கு சாத்தியம் . கடந்த கணங்களைப்பற்றி அது கவலை கொள்வதேயில்லை . முந்தைய கணத்தின் ஆதிக்கம் அல்லது விளைவு , நிகழ் கணத்தினை பாதிக்கும் என்றானாலும் , அது இயற்கைக்குத்தான் பொருந்துகிறது . வாழ்விற்கல்ல . இயற்கை , அதன் முந்திய நிகழ்வின் அடிப்படையில் தன்னை தகவமைக்கிறத