முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதிய முகங்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் தேவை

நண்பர்களே.. ஒரு புதிய படத்திற்குப் புது முகங்கள் தேவை. ஆண்: அழகாகவும், சராசரி உயரமும், ஒரு இளம் போலிஸ் அதிகாரிக்கு தேவையான உடற்பயிற்சி செய்த உடற்கட்டும் தேவை. வயது 25-30. பெண்: இரண்டு பெண்கள் தேவை. அழகான பெண்கள். வயது 18-25. உதவி இயக்குனர்கள் தேவை: படித்த, விருப்பம் கொண்ட இளைஞர்கள் தங்களுடைய விபரங்களை அனுப்பவும். முகவரி: [email protected]

இரட்டை வேடப்படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன?

திரைப்படத் தொழில்நுட்பங்களில் நாம் தெரிந்துகொள்ள மிக ஆவலாக இருக்கும் விஷயங்களில், ’இரட்டை வேடப்படங்கள்   எப்படி   எடுக்கப்படுகின்றன’ என்பதும் ஒன்று. இத்தலைப்பைப் பற்றிப் பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஒரு கமலை இரண்டு கமலாக காட்டுவதற்கும், ஒரு ரஜினியை இரண்டு ரஜினியாக காட்டுவதற்கும், அதுவும் அவ்விரண்டு நபரையும் ஒரே ஃபிரேமில் காட்டுவதற்கும் சில தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. அதில் மிக முக்கியமான தொழில்நுட்பத்தைப்பற்றி இக்கட்டுரையில் காணலாம்.