முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

 


இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை. அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது?

நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு, இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே, அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும்? இலைத்தழை வேண்டுமானால், வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும், அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை.


மேலும், பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது. மண்ணில் வாழும் புழுக்கள், நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன. இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது. அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார். அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு.


சிறு தானிய வகைகளில் நாட்டுச் சோளம், நாட்டு கம்பு, தினை, சாமை, குதிரைவாலி, பயிறு வகைகளில் உளுந்து, பாசி பயறு, தட்டைப் பயறு, கொண்டைக் கடலை, துவரை, கொத்தவரை, நரிப்பயறு, எண்ணெய் வித்துக்களில் எள், நிலக்கடலை, சூரியகாந்தி, சோயா பீன்ஸ், ஆமணக்கு, மசால் வகைளில் கொத்தமல்லி, கடுகு, சோம்பு, வெந்தயம், தழைச்சத்துக்கு சணப்பு, தக்கப்பூடு போன்றவற்றை அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ அளவிற்கு எடுத்துக்கொண்டு, அதனை விதைத்து ஒரு ஐம்பது நாட்கள் வளர்த்து, அப்படியே மண்ணோடு ஓட்டி விட்டு விடவேண்டும். இதன் மூலம் மண்ணிலிருந்து காணாமல் போன, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் பல்வேறு நுண்ணூட்டங்கள் மீண்டும் மண்ணிற்கு கிடைத்துவிடும் என்கிறார்.

நெற்பயிர் வளர்வதற்கு அடிப்படையாக தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, நுண்ணூட்டங்கள்(நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு, துத்தநாகம்) மற்றும் மண்புழு, பாக்டிரியா என்று பல்வேறு நுண்ணுயிரிகளின் துணை தேவைப்படுகிறது. அதனை மீட்டெடுக்க இந்த பல தானிய விதைப்பு பயன்படும் என்பதனால், நாங்கள் முதலில் செய்தது. அதைத்தான்


ஐம்பது நாட்களுக்குப் பிறகு, அதனை மண்ணோடு ஓட்டி விட்டு, நிலத்தை வளப்படுத்தினோம். பிறகு இரசாயண உரங்களுக்கு பதிலாக பல்வேறு இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தினோம்













ஜீவாமிர்தம், பஞ்சகாவியம், மீன் அமிலம், .எம் கரைசல், பத்திலைக்கரைசல், டிரைக்கோடர்மா வெரிடி, யூமிக் அமிலம், பாஸ்வோ பேக்டிரியா, அசோஸ்பைரில்லம்,சுடோமோனஸ் போன்ற பல்வேறு இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தினோம். அவற்றை பற்றி தொடர்ந்து பேசுவோம்.


(தொடரும்)


பின்குறிப்பு: நாங்கள் செய்துக்கொண்டிருக்கும் விவசாயத்தை வீடியோ பதிவாக ஒரு யூடியூப் சேனலில், இன்ஸ்டாவில், முகநூலில் பதிவு செய்து வருகிறோம்.அதற்கான லிங்க் 


YouTube: https://www.youtube.com/@AruvadaiFarm


Instagram: https://www.instagram.com/aruvadaifarm?igsh=NGY1NG9jOWExc3Ex&utm_source=qr


Facebook: https://www.facebook.com/profile.php?id=61566874415090&mibextid=LQQJ4d



#organicfarming #organics #இயற்கைவிவசாயம் #விவசாயம் #விஜய்ஆம்ஸ்ட்ராங் #vijayarmstrong 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...