புகைப்படம், கானொளி ஆகிய இரு காட்சிமொழி ஊடகங்களும், ஒளியைகொண்டே இயங்குகின்றன.
ஓவியருக்கு வண்ணங்கள், கவிஞருக்கு வார்த்தைகள் எப்படியோ… அப்படித்தான், ஒரு புகைப்படக்காரனுக்கும், ஒளிப்பதிவாளனுக்கும் ‘ஒளி’ அவசியமாகிறது.
வண்ணத்தை, வார்த்தையை முறையாக, நேர்த்தியாக கையாளத்தெரிந்திருக்க வேண்டியது எத்தனைஅவசியமோ… அத்தனை அவசியம் ‘ஒளியை’ கையாளத்தெரிந்து வைத்திருப்பதும்.
ஒளிக்கு நிறம் உண்டு… நாம் அறிவோம்.
ஒளிக்கு மனமும் உண்டு… அறிந்ததுண்டா?
ஆம்… ஒளிக்கு மனம் உண்டு.
ஒளியின் தன்மை, அதன் அடர்த்தி, அதன் அளவு, அதன் வண்ணம் கொண்டு… உங்கள் மனநிலையை மாற்றிஅமைக்கும் வல்லமை ஒளிக்கு உண்டு.
இசை எப்படி உங்கள் மனநிலையை பாதிக்கின்றதோ, அதுபோலவே ஒளியும் பாதிக்கும்.
எளிய உதாரணங்கள் பார்க்கலாம்…
நண்பகல் வெய்யல், உச்சந்தலைக்கு மேலே சூரியன்…
மாலை அந்தி சாயும் நேரம், சூரியன் மறைவதற்கு காத்திருக்கிறான்…
இதில்… நீங்கள், எந்த நேரத்தை நடை பயணத்திற்கு தேர்ந்தெடுப்பீர்கள்?
மாலை நேரத்தைதானே…!
அமைதியாக இசை கேட்க… எந்த நேரத்தை தேர்தெடுக்கிறோம்?
இரவைத்தானே!
கடல் அலையை தொட்டு மகிழ எந்த நேரத்தை தேர்ந்தெடுக்கிறோம்?
மாலை நேரத்தை தானே!
இதுவெல்லாம்… ஒளியை மையப்படுத்திதான் என்பது நாம் அறிந்ததுதான் இல்லையா?
ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ற ஒளி அவசியமாகிறது அல்லவா…
அதேதான்…!
ஒளி நம்மை பாதிக்கிறது.
மனதைத் தொடத்தெரிந்த ஒன்று, மனதை ஊடுருவத்தெரிந்த ஒன்று, மனதோடு இணைப்பைஏற்படுத்திக்கொள்ளத்தெரிந்த ஒன்று….எனில் ஒளிக்கு மனம் உண்டு என்பது சரிதானே..!?
ஒரு காட்சியை… காட்சிமொழியாக்குவது ஒளிதான். அதனை முறையாக கையாண்டால் மட்டுமே சாத்தியப்படும்நுட்பம் அது.
ஒரு சிறந்த படத்திற்கும், சுமாரானப்படத்திற்கு பெரும்பாலும் ஒளியே காரணமாக இருக்கும்.
உண்மையில் ஒளி ஒரு மொழியும் கூட. ஒளியைப் பயன்படுத்தி உங்களோடு உரையாட முடியும்.
அதற்கு எளிய உதாரணம்….டிராஃபிக் சிக்னல், ஆம்புலன்ஸ்.
அதனால்தான் சொல்கிறேன்…
ஒளிக்கு வண்ணம் உண்டு
ஒளிக்கு மனம் உண்டு
ஒளிக்கு மொழியும் உண்டு
வாருங்கள்… அந்த மொழியை முறையாக நேர்த்தியாக கையாள கற்றுக்கொள்வோம்.
Coming Sat & Sunday. Register Today
Cinematic Lighting Workshop - Two Days
For Photographers & Videographers
Dec 04 & 05th 2021
Saturday & Sunday - Pathayam Inn - Thiruvanamalai
#tamilcinema #photography #photoshoot #photo #photographyworkshop #photographer #photographylovers #shortfilms #shortfilmshoot #shortfilmcompetition #shortfilmcompetition #tamil #tamilcinema #learnphotography #learncinematography #learncinema #learnlighting #workshop #images #viscom #studentlife
கருத்துகள்
கருத்துரையிடுக