முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'Flash mob' -உம் ‘Why this Kolaveri Di’- யும்

நகரம் வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருக்கிறது. நகரத்தின் பரபரப்பான இடம் அது. கடைவீதி, தொடர்வண்டி நிலையம், பேருந்து நிலையம், வணிகவளாகம் போன்ற ஒரு பொது இடம். மக்கள் கூடுமிடம். அங்கே இருந்த ஒலிபெருக்கி ஏதோ ஒரு இசையை ஒலிப்பரப்பிக் கொண்டிருக்கிறது. இப்போது ஒரு பிரபல பாடல் ஒலிக்கத்துவங்குகிறது. அங்கே வந்த ஒருவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் கூட்டத்தின் மையத்திற்கு வந்து அப்பாடலுக்கு ஆடத் துவங்குகிறார். கூட்டத்தில் சிலர் அதை கவனிக்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்களில் ஒருவர் அருகில் வந்து அவரும் ஆடிக்கொண்டிருப்போரோடு சேர்ந்து ஆடத்துவங்குகிறார். பாடலும், அதிலிருக்கும் துள்ளலும் வசீகரமாக இருக்கிறது. அதைப்பார்த்த மேலும் சிலரும் அவர்களோடு சேர்ந்து ஆடத்துவங்குகிறார்கள். கூட்டம் இதை ஆச்சரியத்தோடு பார்க்கத்துவங்குகிறது. ஆட்டத்தின் உற்சாகம் மெல்லப் பரவுகிறது. மேலும் பலர் ஆட்டத்தில் இணைந்துக்கொள்கிறார்கள். கூட்டம் இவ்வாட்டத்திற்கு ஒத்திசைந்து கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறது. வேடிக்கை பார்த்தவர்கள், அவ்வழியே கடந்துச் சென்றவர்கள் எல்லோரும் தங்கள் உடமைகளை ஆங்காங்கே வைத்துவிட்டு, அவ்வாட்டத்தில் பங்கெடு

“I am the Greatest.” - நான் மிகச் சிறந்தவன்

“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என்  கறுப்பு மக்களுக்காக.  நான் நிறைய செய்ய முடியும்.  கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார்.  ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான்.  இப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”   இந்த வார்த்தைகள் யாரால், எப்போது, எங்கு சொல்லப்பட்டது என்பது மிக முக்கியமானது. இவ்வார்த்தைகளின் முழு பரிமாணத்தையும் நாம் புரிந்துக்கொள்ள ஒரு வரலாற்றைத் தெரிந்துக்கொள்ளவேண்டும். அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். ஆம், அந்த மனிதனின் வாழ்க்கையே ஒரு வரலாற்று நிகழ்வுதான். அந்த மனிதன்.. அரசன் அல்லன், தலைவன் அல்லன், புரட்சி வீரனுமல்லன். உங்களைப்போல, என்னைப்போல மிகச்சாதாரணமான மனிதன்தான்.  ஆனால் அவனது வாழ்வாதாரப் போராட்டம் என்பது, அவனது சுயவளர்ச்சியாக மட்டுமில்லாமல், அவனது இன எழுச்சியாகவும் இருந்தது. அது,