இக்கட்டுரை, 'ARRI ALEXA' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில் - என்ற கட்டுரையின் தொடர்ச்சி. அதைப் படித்துவிட்டு தொடரவும். ஒரு டிஜிட்டல் கேமராவின் முக்கிய பாகங்களாக அதன்.. அ. லென்ஸ் மௌண்டு (Lens Mount) ஆ. இமேஜ் சென்சார் (Image Sensor) இ. ரெக்கார்டிங் (Recording) ஈ. வியு பைண்டர் (View Finder) போன்றவைகள் கருதப்படுகின்றன என்பதையும், அதில் ‘லென்ஸ் மௌண்டு’ பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்துவிட்டோம் என்பதை நீங்கள் படித்துவிட்டுத்தான் இங்கே வந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையைத் தொடர்கிறேன்.. ஆ. இமேஜ் சென்சார் (Image Sensor): டிஜிட்டல் கேமராக்களின் மிக ஆதாரமான பாகம், அதன் சென்சார் தான். சென்சாரின் தரத்தைப் பொருத்தே டிஜிட்டல் கேமராக்களின் தரம் மதிப்பிடப்படுகிறது. 'Single CCD', '3 CCD' கேமராக்களைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ‘CCD’ மூலம் ஒளியை உள்வாங்கி பதிவுசெய்வது என்பது 'Single CCD' கேமரா எனவும், மூன்று ஆதார வண்ணங்களுக்கு ஏற்ப, மூன்று தனித்தனியான 'CCD'-க்கள் மூலமாக ஒளியை பிரித்து உள்வாங்கி, பதிவ...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!