“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக. நான் நிறைய செய்ய முடியும். கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார். ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான். இப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே” இந்த வார்த்தைகள் யாரால், எப்போது, எங்கு சொல்லப்பட்டது என்பது மிக முக்கியமானது. இவ்வார்த்தைகளின் முழு பரிமாணத்தையும் நாம் புரிந்துக்கொள்ள ஒரு வரலாற்றைத் தெரிந்துக்கொள்ளவேண்டும். அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். ஆம், அந்த மனிதனின் வாழ்க்கையே ஒரு வரலாற்று நிகழ்வுதான். அந்த மனிதன்.. அரசன் அல்லன், தலைவன் அல்லன், புரட்சி வீரனுமல்லன். உங்களைப்போல, என்னைப்போல மிகச்சாதாரணமான மனிதன்தான். ஆனால் அவனது வாழ்வாதாரப் போராட்டம் என்பது, அவனது சுயவளர்ச்சியாக மட்டுமில்லாமல், அவனது ...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!