மிக இயல்பாய் ஒரு திரைப்படம். காட்சி அமைப்பு, நடிகர்கள் தேர்வு, நடிப்பு, வசன உச்சரிப்பு என அத்தனையும் மிக இயல்பாய் இருக்கிறது. பதின்பருவத்தில் எல்லா இளைஞனும் இளைஞியும் கடந்து வரும் வாழ்க்கையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொருவரையும், அவர்களின் வாழ் சூழ்நிலையைப் பொருத்து, அவர்களுக்கான பதின்ம வயது காதல் அல்லது பாலுணர்ச்சி கடந்து செல்கிறது. இப்படத்தில், சென்னையின் விளிம்பில் பரவி இருக்கும் சிறு கிராமங்களில் ஒன்றைக் களமாகவும், அதன் இளம் பருவத்தினரை பாத்திரங்களாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர். படிப்பு, வேலை பொருட்டு தினமும் பேருந்துப் பயணம் மேற்கொள்ளும் பதின்பருவத்தினர், அநேகமாக எல்லோரும் சந்தித்த காதல் நாட்கள் திரையில் விரிகின்றன. பேருந்துக் காதல் எல்லா நகரங்களிலும், கிராமங்களிலும் நடக்கிறது. இதை தமிழ்ச் சமூகம் தவிர்க்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன். அப்படியான காதல் காட்சிகளும், விடலைத்தனங்களும் கொண்ட சம்பவங்களால் படத்தை நிறைத்திருக்கிறார் இயக்குனர். பல காட்சிகள் பார்வையாளர்களை தங்கள் பதின்ம பருவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. திரையரங்கு கொண்டாட்டத்தில் திளைக்க...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!