‘முகம் மாறும் தமிழ்த் திரைப்படங்கள்’ என்பதே தற்போது பேச்சாகயிருக்கிறது. சிற்றிதழ்களிலிருந்து பெரும் வணிக இதழ்கள் வரை தமிழ் சினிமாவின் அண்மைக்கால மாறுதல்களைப் பற்றி பேசுகின்றன. கதை, களன், உள்ளடக்கம், அழகியல், படைப்பாளுமை எல்லாம் மாற்றம் கண்டிருக்கின்றன என்றும், அவை எதிர்காலம் நோக்கிய நற்பார்வையை ஏற்படுத்துகின்றன என்றும் மகிழ்ந்து செய்தி வெளியிடுகின்றன. உண்மைதான், அண்மைக்காலமாய் தமிழ் சினிமா கவனிக்கத்தக்க மாறுதல்களை நோக்கி நடைபோடுகிறது. நல்ல, சிறந்த, நேர்த்தியான சில படங்கள் வெளியாகியிருக்கின்றன. ‘வழக்கு எண் 18/9’, ‘அட்டகத்தி’, ‘மதுபானக்கடை’, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ எனத் தொடரும் அதன் பட்டியல், தமிழ்த் திரையின் ஆரோக்கியமான முகத்தை வெளிக்காட்டுகின்றன. அதே நேரம் ‘ஏழாம் அறிவு’, ‘பில்லா-2’, ‘சகுனி’, ‘தாண்டவம்’, ‘மாற்றான்’ போன்ற பெரிய படங்கள் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளன. எளிய உள்ளடக்கமும், பொருட்செலவைக் குறைத்தும் எடுக்கப்பட்ட சிறிய, புதிய முகங்களால் உருவாக்கப்பட்டப் படங்கள் நிறைவான வசூலைக் கொடுப்பதும் அதிகப் பொருட்செலவில் பெரிய நட்சத்திரங்களால் உருவாக்கப்பட்ட மெகா பட
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!