தகவல்: இப்புத்தகம் ஜனவரி நான்காம் தேதி வெளியிடப்பட்டது. கிடைக்குமிடம்: டிஸ்கவரி புக் பேலஸ். கே.கே.நகர். சென்னை - 78 தொடர்புக்கு: https://www.facebook.com/discovery.palace?fref=ts ------------------------------------------------- தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”, வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவல் மகிழ்ச்சியையும் ஆவலையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது. அவரிடமும் தொழில் பயின்றவன் என்ற முறையில் இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. பிக்சல் - முழுமையான டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல் இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட புகைப்பட விளக்கங்களுடன் சினிமாவின் ஆரம்பம் முதல் 1670 தொடங்கி 2012 வரை நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!