முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்றே கடைசி:

1916 ஆம் ஆண்டு திரு.ரங்கசாமி நடராஜ முதலியார் எடுத்த ‘கீசக வதம்’ திரைப்படத்தின் வாயிலாகத் துவங்குகிறது தமிழ் சினிமாவின் வரலாறு. உலகின் முதல் பேசும் படமான ‘தி ஜாஸ் சிங்கர்’ (The Jazz Singer) 1927 ஆம் ஆண்டு வெளியாயிற்று. அதிலிருந்து நான்கே ஆண்டுகளில் தமிழின் முதல் பேசும் படம் ‘காளிதாஸ்’திரு.H.M.ரெட்டி அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது. தமிழின் முதல் திரைப்படம் வெளிவந்து 98 ஆண்டுகள் ஆகிவிட்டது. விரைவில் நூற்றாண்டை கொண்டாடப் போகிறோம். காளிதாசுக்கு பிறகு, இத்தனை ஆண்டுகளில் (83) வெளிவந்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டும் என்கிறது விக்கிப்பீடியா. பல இயக்குனர்களை, ஒளிப்பதிவாளர்களை, இசையமைப்பாளர்களை, நடிகர்களை, தொழில்நுட்ப வல்லூநர்களைக் கடந்து வந்திருக்கிறோம். சிறப்பான பல திரைப்படங்களை அவர்களின் படைப்பாக்கத்தால் பெற்றிருக்கிறோம். திரையுலகின் வாயிலாக எண்ணற்ற தலைவர்களை தமிழகம் அடைந்திருக்கிறது. கணக்கில் அடங்கா ரசிக சிகாமணிகளை உற்பத்தி செய்திருக்கிறது தமிழ் சினிமா. பாலபிஷேகத்தில் ஆரம்பித்து, அலகு குத்தி காவடி எடுப்பது வரைக்கும் செல்லக்கூடிய, மகா ரசிகர்களைப் பெறும் பாக்கியத்தை அரு...

தமிழ் சினிமாவும் டிஜிட்டல் புரட்சியும்:

டிஜிட்டல் புரட்சி முழுதுமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட இன்றைய காலகட்டத்தில் , அதன் வளர்ச்சியால் திரைப்படத்துறை கண்டிருக்கும் மாற்றங்களையும் நாம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம் . கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்த்திரைப்படங்களின் எண்ணிக்கையில், சிறுபடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகின்றன என்பதையும், பெருவெற்றி பெற்ற படங்களின் வரிசையில் சிறுபடங்கள் குறிப்பிடத்தகுந்த இடங்களைப் பிடிப்பதையும் நாம் அறிவோம் . புதிய தலைமுறை இயக்குனர்களின் வரவும் , அவர்களின் வெற்றியும் டிஜிட்டலின் வளர்ச்சியால் விளைந்த பயன்களில் ஒன்று . அவர்களில் பலர் இளைஞர்கள். பலரும் பாரம்பரியமான திரைப்பட அனுபவமில்லாதவர்கள். ஆனால் எந்தக்குறையுமில்லாத வெற்றிப்படைப்புகளை அவர்கள் தந்தது ஒரு புதிய சிக்கலுக்கு வழிவகுத்திருக்கிறது. மூத்த அனுபவம் வாய்ந்த கலைஞர்களுக்கான வாய்ப்பை இவர்களின் வெற்றி தடுக்கிறது அல்லது அவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்க ஏதுவாக இருக்கிறது என்பது அந்தச் சிக்கல் அல்லது குற்றச்சாட்டு! அதாவது, இன்று கதை கேட்கும் தயாரிப்பாளரோ அல...