Posts

Showing posts from May, 2011

LEARN TO MAKE A SHORT FILM - Cinematography Workshop @Kotagiri on 10, 11, 12 Aug 2019

Image
ஒருகல்லில்இரண்டுமாங்கா.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!?
அதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம். 
இப்பயிற்சிப்பட்டறைஇரண்டுவிதங்களில்பயன்தரும்.
1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம். 
2. கோத்தகிரிபோன்றஒருமலைப்பிரதேசத்தின்அழகைரசித்திடப்போகிறோம். மொதுவாகமலை

தண்டிக்கப்பட்ட 'மனித குலத்திற்கு எதிரான குற்றவாளிகள்'

Image
செப்டம்பர் 1, 1939-இல் துவங்கிய அந்த போர் 1945 ஆகஸ்டு பதினைந்தாம் தேதி முடிவடைந்த போது மொத்தம் ஐந்து முதல் ஏழு கோடி உயிர்களை பலி வாங்கி இருந்தது. போலந்தை ஆக்கிரமித்தல் (பிடித்தல்) என்பதாக இந்தப் போரை ஜெர்மனி ஆரம்பித்து வைத்தது. பின்பு அது நண்பனுக்கு நண்பன், எதிரிக்கு எதிரி என்பதாய் விரிவடைந்து இரண்டாம் உலகப்போராக உருவெடுத்தது.

ஆரம்பத்தில் ஜெர்மனியின் நாடு பிடிக்கும் போக்கை, சில நாடுகள் நட்பாக இருப்பதன் மூலமாகவும் நடுநிலையாக இருப்பதன் மூலமும் ஆதரித்தன. வலியும் வேதனையும் அவனவனுக்கு வரும்போதுதான் தெரியும் என்ற கணக்காய் ஜெர்மனி மெல்ல தன்னை நோக்கியும் தன் நட்பு நாடுகளை நோக்கியும் தன் கரங்களை நீட்டிய போதுதான் பல தேசங்கள் சுதாரித்துக்கொண்டு ஜெர்மனியை எதிர்க்கத் துவங்கியன. அதற்குள் ஐரோப்பியக் கண்டத்தில் பெரும்பலான நாடுகளை ஜெர்மனி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தது. 1939இல் துவங்கிய இந்த போரில் 1941 வரை வட அமெரிக்கா, நடுநிலை நாடு என்ற போர்வையில் தன் ஆயுதங்களை விற்று, கல்லா கட்டிக்கொண்டிருந்தது. டிசம்பர் ஏழு 1941இல் அவாய்(Hawaii) பகுதியில் இருந்த 'பேர்ல் துறைமுகம்' என்னும் அமெரிக்க…

'புத்தனும் காந்தியும் யுத்தக்களத்தில் நின்றார்கள்' -மே 18. தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்!

Image
மே 18. தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்!

இன்று கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் ஈழம் சார்ந்து எழுதிய பாடல்கள் அடங்கிய 'என் தம்பி வருவான்' என்ற இசைக் குறுந்தகடு (CD) வெளியீட்டு விழா தி.நகர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது.

பெரியவர்கள் திரு.பழநெடுமாறன், திரு.பெ.மணியரசன், திரு.தியாகு, திரு.தா.பாண்டியன் மற்றும் திரைப்பட இயக்குனர் திரு.புகழேந்தி போன்றவர்கள் பங்கேற்றார்கள்.

இந்தக் குறுந்தகட்டில் ஆறு பாடல்கள் இருக்கின்றன. கூட்டத்தில் பெரியவர்கள் மேடைக்கு வந்த பிறகு எல்லோரும் சேர்ந்து அந்த பாடல்களைக் கேட்டோம். கூட்டமாக சேர்ந்து கேட்கும்போது அதன் தாக்கம் அதிகமாகிறது. அதுவும் இந்தப் பாடல்கள் ஈழத்தின் வீரம், வீழ்ச்சி, எழுச்சியைப் பாடுபொருளாகக் கொண்டது. மிக அமைதியாகக் கேட்டோம். அற்புதமான ஒரு அமைதி அங்கே நிலவியது. துக்க நாளை முழுமையானதாக உணரமுடிந்தது.

அனைத்துப் பாடல்களுமே கேட்கப்படவேண்டியவை என்றாலும், அதில் சில வரிகள் என்னைக் கவர்ந்தன. அதில் 'புத்தனும் காந்தியும் யுத்தக்களத்தில் நின்றார்கள்' என்று தொடங்கும் பாடலில் புத்தமதம் வழி வந்த இலங்கையும் காந்திய வழி வந்த இந்தியாவும் ஒன்று கூடி…