Posts

Showing posts from June, 2011

Cinematic Lighting in Wedding Photography - Trichy - 23.04.19

Image
கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் நாடு முழுவதும் பல்வேறு பயிற்சிப்பட்டறையை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு துறைச்சார்ந்து நடத்தி வருகிறேன். அவ்வகையில் வரும் செவ்வாய் கிழமை (23/04/19) அன்று திருச்சியில் 'சினிமேட்டிக் லைட்டிங் இன் வெட்டிங் போட்டோகிராபி’ என்ற தலைப்பில் 'திருச்சி நிக்கான் டெக்னிக்கல் கிளப்' ஒரு பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்திருக்கிறது.

‘Lighting’ என்பது புகைப்படக்கலையின் ஆதாரமான ஒன்று. ஒளியை எப்படி பயன்படுத்துவது என்பதும், அதன் பல்வேறு கூறுகளைப்பற்றியும் இப்பயிற்சி வகுப்பில் காணப்போகிறோம். ஒளியின் தன்மை, ஒளியின் அளவு, ஒளியின் வண்ணம், ஒளியின் அடர்த்து போன்றவற்றைப் பற்றியும், ஒரு தரமான புகைப்படத்திற்கு ஒளியின் அளவைப்போலவே ஒளியின் தரம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் பார்க்கப்போகிறோம்.

இப்பயிற்சி வகுப்பில்..

1. ஒளியமைப்பின் அடிப்படையான Three Point Lighting மற்றும் அதன் பயன்பாடு.

2. ஒரே ஒரு விளக்கை (Light) வைத்துக்கொண்டு எப்படி பல்வேறு வகையில் ஒளியமைப்பது என்பதையும், அதனைப் பயன்படுத்தி எப்படி சிறப்பான புகைப்படத்தை எடுப்பது.

3. ஒளியை சிறப்பாக பயன்படுத்துவது எ…

நாங்கள் அரசியல் அப்பாவிகள் அல்ல

Image
அண்மையில் இரண்டு புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது. 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராசீவ் கொலைப் பின்னணி' என்ற தலைப்புடைய இந்த புத்தகம் 1998 காலகட்டத்தில் 'இராசீவ் சர்மா' என்ற வடநாட்டு பத்திரிக்கையாளரால் எழுதப்பட்டு இப்போது தமிழில் 'ஆனந்தராசு' என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. சவுக்கு இணையத்தளத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் சொல்ல வரும் செய்தி, 'இராசீவ் காந்தியின் கொலை என்பது புலிகளைக் கூலிகளாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய சதி'என்பதாகும்.

பொதுவெளியில் ஏற்கனவே உலவும் கேள்விகள், ஐயங்கள் என்ற வரையரையில் பல செய்திகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராசீவின் கொலைக்குப் பின் நிகழ்ந்த சி.பி.ஐயின் விசாரணையில் தேங்கி நிற்கும் ஐயங்கள், பதில் தேடாத/கிடைக்காத கேள்விகள் என சிலவற்றை இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. உலகளாவிய சதி என்பதற்கு இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் சிலவற்றில் இலங்கையின் அப்போதைய பிரதமர் பிரேமதாசா, இஸ்ரேலிய உளவுத்துறையான மொசார்ட், போபர்ஸ் பீரங்கி ஊழல், இந்திய அரசியல்வாதிகள் என நீண்டு சந்திரா சாமி,சுப்பிரமணியச…