முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘வழக்கு எண் 18/9’

மனிதப் பிறவியில் மிகக் கொடூரமானது ஏழ்மையாக இருப்பதுதான். ஏழைகளின் வாழ்க்கையில் இருக்கும் குரூரத்தன்மைக்கு எவ்வித விளக்கமும் தந்துவிடமுடியாது. அவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்பதல்ல, நீதி என்று ஒன்று இருப்பதும் அதில் ஏழைகளுக்கு சம்பந்தம் உண்டா என்பதும் கேள்விக்குறியானதே! ஏழையாகப் பிறந்துவிட்ட ஒருவனின் அவல நிலையையும் இச்சமூகம் அவனுக்கு வழங்கும் வாழ்க்கையையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். ஒரு ஏழை இளைஞனின் காதலும் அதற்கான சிக்கலுமல்ல இப்படம். இதை ஒரு காதல் படமாக என்னால் பார்க்க முடியவில்லை. சமூகத்தில் வறுமையின் பிடியில் உழன்று கிடக்கும் பல கோடி அப்பாவி மானுடர்களின் அவல நிலையைப் பதிவு செய்யும் ஒரு முயற்சியாகத்தான் இப்படத்தைப் பார்க்க முடிகிறது. ஒரு படைப்பு எப்படியானதாக இருக்க வேண்டுமோ அப்படியானதாக இப்படம் இருக்கிறது. ஒரு கலை வடிவத்தின் ஆதார நோக்கம் எதுவாக இருக்க வேண்டுமோ அதுவே இப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது. முழுக்க முழுக்க புதிய நடிகர்களை வைத்துக்கொண்டு ஒரு தேர்ந்த கலைஞன் ஒரு அற்புதப் படைப்பைக் கொடுத்திருக்கிறார். கதை, கதாபாத்திர தேர்வு, நடிப்பு மற்று