மனிதப் பிறவியில் மிகக் கொடூரமானது ஏழ்மையாக இருப்பதுதான். ஏழைகளின் வாழ்க்கையில் இருக்கும் குரூரத்தன்மைக்கு எவ்வித விளக்கமும் தந்துவிடமுடியாது. அவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்பதல்ல, நீதி என்று ஒன்று இருப்பதும் அதில் ஏழைகளுக்கு சம்பந்தம் உண்டா என்பதும் கேள்விக்குறியானதே!
ஏழையாகப் பிறந்துவிட்ட ஒருவனின் அவல நிலையையும் இச்சமூகம் அவனுக்கு வழங்கும் வாழ்க்கையையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.
ஒரு ஏழை இளைஞனின் காதலும் அதற்கான சிக்கலுமல்ல இப்படம். இதை ஒரு காதல் படமாக என்னால் பார்க்க முடியவில்லை. சமூகத்தில் வறுமையின் பிடியில் உழன்று கிடக்கும் பல கோடி அப்பாவி மானுடர்களின் அவல நிலையைப் பதிவு செய்யும் ஒரு முயற்சியாகத்தான் இப்படத்தைப் பார்க்க முடிகிறது.
ஒரு படைப்பு எப்படியானதாக இருக்க வேண்டுமோ அப்படியானதாக இப்படம் இருக்கிறது. ஒரு கலை வடிவத்தின் ஆதார நோக்கம் எதுவாக இருக்க வேண்டுமோ அதுவே இப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது.
முழுக்க முழுக்க புதிய நடிகர்களை வைத்துக்கொண்டு ஒரு தேர்ந்த கலைஞன் ஒரு அற்புதப் படைப்பைக் கொடுத்திருக்கிறார். கதை, கதாபாத்திர தேர்வு, நடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு என அனைத்தையும் மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்.
‘கேனான் 5D’ போன்ற சிறிய கேமராவின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி, கதை நிகழும் களத்தில் பார்வையாளனைக் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார்கள். கேனான் 5D கேமராவை மிகச் சிறப்பாக பயன்படுத்திய திரைப்படமாக , என் வரையில் இதுவே முதல் படம் என்பேன்.
ஒரு நல்ல திரைப்படம், ஒன்றுபட்ட மனநிலையில், ஒத்த சிந்தனையின் குவி மையத்தில் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களையும் கொண்டு போய் நிறுத்தும். அந்நேரங்களில் ஒவ்வொரு பார்வையாளனின் சிந்தனையும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். அத்தகைய ஒரு நிலையை இப்படத்தில் பார்க்க முடிந்தது. காவல்துறை அதிகாரி அவ்விளைஞனுக்கு செய்யும் அநீதியின் போது, திரையரங்கில் ‘போலிஸ்கார தே..பையா’ என்றொரு குரலெழுந்தது. அடுத்த கணம் ஒட்டுமொத்த திரையரங்கமும் கைத்தட்டியது. தொடர்ந்து பல முனைகளிலிருந்தும் அதே சொல்லைப் பயன்படுத்தி வசவுகள் வந்துகொண்டே இருந்தது. அதுவொன்றே சாட்சி, இத்திரைப்படம் சமூகத்தை எந்தளவிற்குப் பிரதிபலித்திருக்கிறது என்பதற்கு.
மிகுந்த மனநிறைவோடும், பெருமிதத்தோடும் திரு. பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறப்பான படம்!
பதிலளிநீக்குபடத்தை திரையரங்கில் சென்று பார்க்கும்படி பலருக்கும் பரிந்துரை செய்தேன்.
பதிவுலகமே மொததமாக திரண்டு இப்படத்தை பாராட்டி இருக்கிறது.
பதிலளிநீக்குஇரண்டு பதிவுகள் மட்டும் மட்டமாக எழுதியிருந்தன.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் பதிவு
அது.
சமூக பார்வையில் ஒரு சிறந்த படம்..வாழ்த்துகள்
பதிலளிநீக்குஒளிப்பதிவு மேலும் பல விவரங்கள் அளித்திருப்பீர்கள் என நினைத்தேன்.
பதிலளிநீக்குசுரேஷ் கண்ணன் சார்..அதைப்பற்றி விஜய் மில்டன் அவர்களிடம் ஒரு பேட்டி எடுக்கலாம் என்று இருக்கிறேன்..
பதிலளிநீக்குதிரையுலகில் சமகால கலைஞர்களையும், அவர்களது படைப்புகளையும் சிலாகித்து பாராட்டுவதும் , அதை பதிவாக்குவதும் மிக அபூர்வமான விஷயம். அதை நீங்கள் நேர்மையாக தமிழில் நல்ல படங்கள் வரும்போதெல்லாம் செய்து வருகிறிர்கள் . வழக்கு எண் 18 / 9 திரைப்படம் பாலாஜி சக்திவேல் அவர்களின் மிக முக்கியமான படைப்பு . உங்கள் விமர்சனத்தில் சிறப்பாக அப்படத்தை அடையாள படுத்தியிருக்கிறிர்கள்.
பதிலளிநீக்குசமூக பிரதிபலிப்பு...
பதிலளிநீக்குhello sir, we expect your interviw with vijaymilton.
பதிலளிநீக்குஎன் பார்வையில், இது ஒரு சிறப்பான திரைப்படம். ஒரு மாவோயிஸ்ட் அல்லது சமூக போராளி உருவாவதின் சூழல் மற்றும் தேவை - அரசு இயந்திரத்தின் மூலமே தயாரிக்கப்படுகின்றது என்ற உண்மை இந்த படத்தில் விளக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் கேனான் காமிரா போன்ற சிறிய காமிரா பயன்படுத்திய காரணத்தால் அதை தேவைக்கு அதிகமான வீச்சில் (unwanted flow of camera movement) பயன்படுத்தி இருப்பது போன்ற உணர்வை தந்தது. குறிப்பாக பாடி கேம் ஷாட்டுகளில், கதாப்பாத்திரங்களின் அசைவுகள் முழு இயற்கையாக இல்லை மற்றும் தேவையில்லாத இடங்களிலும் பயன்படுத்தியதை போன்ற உணர்வைத்தந்தது (சைக்கிளில் காமிரா பொருத்தப்பட்ட பல ஷாட்டுகள்). அவை வித்தியாசமான கோணம் என்றதைத்தாண்டி, காட்சியின் அழுத்தத்திற்கு உதவவில்லை (வித்தியாசமான கோணத்தில் இந்த ஷாட் எடுக்கப்பட்டுள்ளது என்பது திரைப்படம் பார்க்கும்போது உணர்ந்தேன், அது கவனச்சிதறல் செய்கின்றது).
பதிலளிநீக்குஒரு செய்தி: நாளை (22 June 2012) திரு. பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு கோவையில் பாராட்டு விழா.