Posts

Showing posts from June, 2014

Cinematic Lighting in Wedding Photography - Trichy - 23.04.19

Image
கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் நாடு முழுவதும் பல்வேறு பயிற்சிப்பட்டறையை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு துறைச்சார்ந்து நடத்தி வருகிறேன். அவ்வகையில் வரும் செவ்வாய் கிழமை (23/04/19) அன்று திருச்சியில் 'சினிமேட்டிக் லைட்டிங் இன் வெட்டிங் போட்டோகிராபி’ என்ற தலைப்பில் 'திருச்சி நிக்கான் டெக்னிக்கல் கிளப்' ஒரு பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்திருக்கிறது.

‘Lighting’ என்பது புகைப்படக்கலையின் ஆதாரமான ஒன்று. ஒளியை எப்படி பயன்படுத்துவது என்பதும், அதன் பல்வேறு கூறுகளைப்பற்றியும் இப்பயிற்சி வகுப்பில் காணப்போகிறோம். ஒளியின் தன்மை, ஒளியின் அளவு, ஒளியின் வண்ணம், ஒளியின் அடர்த்து போன்றவற்றைப் பற்றியும், ஒரு தரமான புகைப்படத்திற்கு ஒளியின் அளவைப்போலவே ஒளியின் தரம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் பார்க்கப்போகிறோம்.

இப்பயிற்சி வகுப்பில்..

1. ஒளியமைப்பின் அடிப்படையான Three Point Lighting மற்றும் அதன் பயன்பாடு.

2. ஒரே ஒரு விளக்கை (Light) வைத்துக்கொண்டு எப்படி பல்வேறு வகையில் ஒளியமைப்பது என்பதையும், அதனைப் பயன்படுத்தி எப்படி சிறப்பான புகைப்படத்தை எடுப்பது.

3. ஒளியை சிறப்பாக பயன்படுத்துவது எ…

SONY CineAlta Cameras: ஒரு அறிமுகம்

Image
டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சியை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். RED ONE கேமராவின் அறிமுகத்தால் சூடுபிடித்த இத்துறை, கேனானின் EOS 5D, 7D, C300, C500 போன்ற விலை குறைந்த கேமராக்களினால் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் நடைபோட்டதையும், மறுபுறம் ARRI போன்ற பெரும் நிறுவனங்களின் டிஜிட்டல் கேமராக்களினால் ( D20, D21, Alexa, Alexa XT) அதன் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். மேலும் RED நிறுவனம் அதனுடைய அடுத்தக் கட்டமாக RED EPIC(5K), RED Scarlet(4K) போன்ற கேமராக்களை அறிமுகப்படுத்தியதையும், தற்போது RED DRAGON(6K) என்ற மேம்படுத்தப்பட்ட சென்சாரையும் சந்தைக்கு கொண்டு வந்து டிஜிட்டல் சினிமாவின் ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் இத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் நன்கறிந்ததே. அதே நேரம் மேலும் பல நிறுவனங்கள் இத்துறையில் கால் பதிக்க முயன்று வருகின்றன என்பதையும் நாம் அறிவோம். இதில் SONY,PANASONIC போன்ற நிறுவனங்கள் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றன. அந்நிறுவனங்களின் பல கேமராக்கள் சந்தைக்கு வந்துவிட்டன. இதில் SONY நிறுவனத்தின் டிஜிட்டல் சினிமா கேமராக…