முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விஷூவல் எஃபெக்ட்ஸ் : ஒரு மாயத்தூரிகை (Part 2)

முந்தைய கட்டுரையில்  ‘VFX’ – இன் முன்னோடி தொழில்நுட்பங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்க்கலாம். முந்தைய கட்டுரையைப் படிக்காதவர்கள் படித்துவிட்டு வந்துவிடுங்கள். ----------------------------------------------------------------------------------------------------------------- Jason and the Argonauts — Stop Motion: திரைப்படம் என்பதே தொடர்ச்சியாக பதிவு செய்யப்படும் ஃப்ரேம்களால் (Frames) ஆனது என்பதையும், அப்படிப் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு ஃப்ரேமிலும், பிம்பம் சிறிது நகர்ந்திருக்கும் என்பதையும், அதை நாம் ஒரே சீராக ஓட்டிப்பார்ப்பதன் மூலம் அதில் உறைந்திருக்கும் நகர்வை உணர்கிறோம் என்பதையும் ஏற்கனவே நாம் அறிவோம். இந்த ஸ்டாப் மோஷன் என்பதும் ஏறக்குறைய அதேதான். நகரும் தன்மையற்ற பொருட்களை நாமாக நகர்த்தி வைப்பதன் மூலம், அப்பொருள் நகர்வதாக ஒரு பாவனையை உருவாக்கலாம். உதாரணத்திற்கு, காட்சியில் ஒரு பொம்மை இருப்பதாக கொள்வோம். அந்த பொம்மைக்குள் ஒரு பேய் புகுந்துகொண்டு அதை நகர்த்துவதாக காட்ட வேண்டுமென்றால், என்ன செய்வது? அங்கேதான் இந்த ஸ்டாப் மோஷன் தொழில்நுட்பம் வ

விஷூவல் எஃபெக்ட்ஸ் : ஒரு மாயத்தூரிகை (Part 1)

இந்தியத் திரை வரலாற்றில் ‘பாகுபலி’ பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாகியிருக்கிறது. அதன் பிரம்மாண்டம், செய்யப்பட்ட செலவு, மனித உழைப்பு, படைப்பாற்றல், எடுத்துக்கொண்ட காலம் என எல்லாம் பிரம்மிப்பாகப் பேசப்படுகின்றன. இந்தியத் திரைத்துறையின் அடுத்த அடி, ஹாலிவுட்டுக்கே சவால் என புகழாரங்கள் சூட்டிப் பெருமிதம் கொள்கிறோம். உண்மைதான், இந்தியத் திரைத்துறை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் துவங்கி விட்டது. இந்திய திரைப்படங்களின் அடுத்தக் கட்டம் அல்லது வருங்காலம் என்பது பல தளங்களில் நிகழத் துவங்கிவிட்டது. அது எளிய மனிதர்களின் வாழ்வை, எதார்த்தத்தை, உணர்வைப் பேசும் எளிய படங்களிலிருந்து, மாபெரும் பொருட்செலவைக்கோரும் பிரம்மாண்ட படைப்புகள் வரை பல தளங்களில் நிகழ்கிறது. எல்லாம் ஒன்று சேர்ந்ததுதானே வளர்ச்சி.! ‘பாகுபலியின்’ வெற்றி இந்தியத் திரை உலகத்திற்கு வேறொரு முக்கியப் பாதையை திறந்து விட்டிருக்கிறது. அது மாபெரும் வணிக வெற்றி என்னும் பாதை. இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் இத்தகைய மாபெரும் வணிகப் பொருளீட்டல், இவ்வணிகத்தில் ஈடுபடும் அத்தனை பேரின் கவனத்தையும் க