Saturday, May 27, 2017

ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை - சென்னை (10th June 2017)வணக்கம் நண்பர்களே… !

( முந்தைய பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டவர்களுக்கு)

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.  

ஆம் நண்பர்களே.. சென்னையில் ஒரு பயிற்சிப்பட்டறையை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்இம்முறை ‘Cinematography Lighting’ பற்றி (மட்டும்) பயிற்றுவிக்கப்போகிறோம்முந்தைய பயிற்சிப்பட்டறையின் தொடர்ச்சியாக இது இருக்கும்கடந்த பயிற்சிப்பட்டறையில் ஒட்டுமொத்த ஒளிப்பதிவுத் துறைப்பற்றி பார்த்தோம்.. இம்முறை அதில் ஒரு பாடமானதிரைப்பட ஒளிப்பதிவில் ஒளியமைப்பு செய்வது எப்படி..!?’ என்பதைப்பற்றி விரிவாகக் பார்க்கப்போகிறோம். ஒரு நாள் பயிற்சிப்பட்டறைமுழுக்க முழுக்க செய்முறை பயிற்சியாக இருக்கும் படி வடிவமைத்திருக்கிறோம்

இம்முறை பிரபல ‘ PANASONIC ’  கேமரா நிறுவனம் நம்மோடு கைகோர்த்திருக்கறார்கள்அவர்களுடைய புதிய 4K கேமராக்களை இப்பயிற்சிப்பட்டறையில் பயன்படுத்தபோகிறோம். மேலும் அவர்களுடைய புதிய தயாரிப்புகள் பற்றிய தகவல்களையும் நாம் அறிந்துக்கொள்ள முடியும்

தொடர்ந்து வெவ்வேறு தலைப்புகளில் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்அதற்கென ‘Image Workshops’ என்ற நிறுவனத்தை துவக்கி இருக்கிறோம். இது புகைப்படம், ஒளிப்பதிவு குறித்த பயிற்சிப்பட்டறைகளை தொடர்ந்து நடத்திடும். குறிப்பாக இதன் பாடங்கள் தமிழில் இருக்கும். (தேவை ஏற்படின்.. ஆங்கிலம் துணைக்கு அழைக்கப்படும்) இதுவே நம்முடைய பயிற்சிப்பட்டறையின் தனித்துவமாக இருக்கும்.

ஆர்வம் கொண்ட நண்பர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுங்கள்நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது

நமது வலைத்தளத்தை ஒருமுறை பார்வையிடுங்கள்


Next course: Saturday 10th June 2017, 09.00 am- 8pm, Places Available

Cost of Lighting Workshop on its own:
2500/-  (flat 500/- discount for students)
2700/-  (includes 10 per cent early booking discount if booked by 3rd June 2017)
3000/-  Full Price

TO REGISTER..
CALL: +91 98406 32922 / +91 99200 29901Venue:
Pure Cinema, Third Floor, No.7, West Sivan Kovil Street, Near Vasan Eye Care, opposite to Vikram Studio, Vadapalani, Chennai.

நேரில் சந்திப்போம்..


நன்றி..!விஜய் ஆம்ஸ்ட்ராங் / ஞானம் சுப்பரமணியன்

ஒளிப்பதிவாளர்கள்.Wednesday, May 17, 2017

Lighting workshop - Chennai
நண்பர்களே..
கடந்த மாதம் உங்களிடம் கேட்டிருந்தோம் அல்லவா..! எவ்விதமான பயிற்சிப்பட்டறை வேண்டுமென்று..!? அதில் அதிக வாக்கு பெற்று முந்தி இருப்பது 'Lighting workshop'.
அதன்படி, சென்னையில் அடுத்த மாதம் (ஜூன்) 'Lighting workshop' நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். பாடதிட்டம், நாள், இடம், கட்டணம் போன்ற தகவல்களை இரண்டொரு நாளில் தெரிவிக்கிறோம்.
நீங்கள் புகைப்படக்காரரா..!? ஒளிப்பதிவாளனாக மாற முயன்று கொண்டிருப்பவரா..!? உதவி ஒளிப்பதிவாளரா..!? உதவி இயக்குநரா..!? அல்லது சினிமா ஆர்வலரா..!? 
இது உங்களுக்கான பயிற்சிப்பட்டறை. இப்பயிற்சிப்பட்டறையின் மூலம் 'Cinematography Lighting' பற்றிய அடிப்படை நுணுக்கங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
தயாராகிக்கொள்ளுங்கள்..!


Friday, May 5, 2017

சிதம்பர நினைவுகள்:நண்பன் ஞானத்தின், படப்பிடிப்பு சம்பந்தமாக ‘எர்ணாகுளம் / கொச்சின்’ வரவேண்டியதிருந்தது.  முதல் நாள் படப்பிடிப்பு, இங்கே புகழ்பெற்ற கல்லூரியான ‘மகாராஜாஸ் கல்லூரியில்’ நடந்தது.  பழைமையும், பாரம்பரியமும் கொண்ட கட்டிடம். நீண்ட வராண்டாவும், அகண்ட வகுப்பறைகளும், விஸ்தாரமான திறந்த வெளியும், அடர்ந்த மரங்களும் கொண்ட கல்லூரி அது. பரவசமான இடம். அதற்கு எதிரே நீர்பரப்பும், படகு குழாமும், பெரிய பூங்காவும் இருக்கிறது. நாங்கள் தங்கியிருப்பது அப்பகுதியில்தான். காலையிலும், மாலையிலும் அப்பூங்காவிற்கு நடை பயிற்சிக்குப் போவதும், படகில் அருகிலிருக்கும் தீவுகளுக்கு போவதுமாய் கடந்த இரண்டு நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.

இன்றைக்கு கூட காலையில் பூங்காவிற்கு சென்று விட்டு, அப்படியே காலை உணவாக ‘தொட்டுக்கொள்ள கிழங்கும், அப்பளமும் கொண்ட கஞ்சியை’ குடித்து விட்டு அறைக்குத் திரும்பினேன்.  நேரம் கடத்த ஏதாவது படிக்கலாம் என்று நினைத்து, கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்தால்...

அட.. என்ன ஆச்சரியம்..! வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது..!

கடந்த வாரம், சொந்த ஊர் செஞ்சிக்கு சென்றிருந்த போது, அப்படியே திருவண்ணாமலையில் எழுத்தாளர் திரு.பவா செல்லத்துரையைச் சந்திக்கச் சென்றிருந்தோம். அன்பு, நட்பு, இரவு உணவு, நெடுநேர உரையாடல்.. என தொடர்ந்த அச்சந்திப்பின் முடிவில், அன்பளிப்பாக சில புத்தகங்களைக் கொடுத்திருந்தார். அதில் ஒன்றுதான்.. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய ‘சிதம்பர நினைவுகள்’.பாலச்சந்திரன் சுள்ளிக்காடு படித்தது, இதே மகாராஜாஸ் கல்லூரியில்தான். இப்புத்தகத்தில் அவர் விவரிக்கும் பல இடங்களை, கடந்த இரண்டு நாட்களாக நான் சுற்றி வந்திருக்கிறேன். படிக்கும்போது, ஒவ்வொரு இடமும், இதுவாக இருக்குமா? அதுவாக இருக்குமா என்று மனம் அசைபோடுகிறது.  எழுத்து மனதுக்கு இன்னும் நெருக்கமாகிறது.

நான் எர்ணாகுளம் வருவேன் என்பதோ.. அதற்கு முன்பாக பவாவை சந்திப்பேன் என்பதோ.. அவர் இப்புத்தகங்களை பரிசளிப்பார் என்பதோ.. நிர்ணயிக்கப்படாதது.  எவ்வித முன்திட்டமிடலும் இல்லாதது..!

ஒரு எழுத்தை அது எழுதப்பட்ட மண்ணிலிருந்தே வாசிப்பது, எத்தனை சுக அனுபவமாக இருக்கிறது தெரியுமா..!?

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றி முன்பே அறிந்திருந்தபோதும், எதுவும் படித்திருக்கவில்லை.  ஏனோ அது வாய்க்காமல் போய்விட்டிருந்தது இத்தனை காலமும்.  இன்று அது வாய்த்தது.

‘சிதம்பர நினைவுகள்’ படிக்க படிக்க.. நம்முள் ஏதோ ஒன்று உடைபடுகிறது.  எத்தனை விதமான மனிதர்கள்..! எத்தனை விதமான வாழ்க்கை..! வாழ்வில் நாம் கடந்து வரும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஒரு பாடத்தை கற்றுத்தருகிறார்கள்.  நம்முடைய சுயத்தை நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள்.  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சுட்டிக்காட்டும் ஒவ்வொரு சம்பவமும், மனிதர்களும் நமக்குள் பல கேள்விகளை எழுப்புகின்றன.  நாம் கடந்து வந்த பாதையை, வாழ்வை, மனிதர்களை அசை போட வைக்கின்றன.  அவர் எழுதும் இத்தனை சம்பவங்களைப் படிக்கும்போதெல்லாம்.. அட, இந்த மனிதனின் வாழ்வில் மட்டும்தான் இதெல்லாம் நடந்ததா, அல்லது பிறர்க்கும் நமக்கும் நடந்ததா.. என்று மனது யோசிக்கிறது.

தம்மை பற்றியும், பிறரைப் பற்றியும் எவ்வித ஒளிவுமறைவுமில்லாது எழுதிக்கொண்டு செல்லுகிறார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. நெருங்கிய நண்பனிடம் மனம் விட்டுப் பேசும் தொனியில் இருக்கிறது அவருடைய எழுத்து.  தாம் கடந்து வந்த பெருமைகளை மட்டுமல்லாது, சிறுமைகளையும் மறைக்காது வெளிப்படுத்துகிறார்.  இணக்கமற்ற உறவு, அதிகாரத் தந்தை, இளமையில் ஏழ்மை, மருத்துவப் படிப்பை உதறிவிட்டு தன்னை நம்பி வந்த பெண்ணை சரியாக பார்த்துக்கொள்ள முடியாமை, முதல் சிசுவைக் கலைத்த பாவம், சிவாஜி கணேசனை சந்தித்த அந்த கணம், வறுமையில் உழலும் கவிஞன், தெருவோர வேசி, தன்னுடைய முறை தவறிய பாலுணர்ச்சி, தூர தேசத்து மார்த்தா அம்மா, கமலாதாஸ் என பலவற்றைப் பேசுகிறார்.

நம்முடைய ஒவ்வொரு வாழ்விலும் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சிலவற்றை கடந்து வந்திருக்கிறோம். சிலவற்றை வாழ்ந்து வந்திருக்கிறோம். சிலவற்றை வெளிப்படுத்தியிருக்கிறோம். சிலவற்றை மறைத்து வைத்திருக்கிறோம்.  வெளியே சொல்ல முடியாத சம்பவங்கள் நம் எல்லோருடைய வாழ்விலும் உண்டுதானே..! பெரிதாக இல்லாவிட்டாலும், சின்னச் சின்ன தவறுகளும், சின்னச் சின்ன விதி மீறல்களும் நாம் எல்லோரும் செய்திருக்கிறோம்.  அதை எல்லாம் என்றேனும் ஒரு நாள் மனம் திறந்து சொல்ல முடிந்தால், எத்தனை சுகம் அது..! உண்மை எப்போதும் நிம்மதியைத் தருகிறது.  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போல பொது வெளியில் சொல்ல முடியாவிட்டாலும், மனதுக்கு நெருக்கமான நட்பிடம் சொல்லவாவது இந்த வாழ்வு எல்லோருக்கும் அருள் புரியட்டும்.

மலையாள மொழியில் எழுதப்பட்ட இக்கட்டுரைகளை, தமிழில் அதன் சாரத்தோடும், அழகோடும் கொண்டு வந்திருக்கிறார் மொழிப்பெயர்ப்பாளர் திருமதி.கே.வி.ஷைலஜா அவர்கள். வேறொரு மொழியின் கட்டுரைகளைப் படிக்கிறோம் என்ற எண்ணம் எழவே இல்லை.  அத்தனை சரளம் மொழியில்.  கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து விடக்கூடிய சுவாரசியம் கொண்டது இப்புத்தகம். தேம்பலும், கண்ணீரும் இல்லாமல் இப்புத்தகத்தை கடந்து வர முடியாது. நிச்சயம் உங்கள் வாழ்வை அசை போட வைக்கும் புத்தகம் இது.

நண்பர்கள் அனைவருக்கும் இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.


சிதம்பர நினைவுகள்
மலையாள மூலம்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
தமிழில் : கே.வி.ஷைலஜா
வெளியீடு: வம்சி புக்ஸ்
விலை: 150/-