முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Poomaram - விடை தேடும் கலை

வருடா வருடம், பள்ளிகளில், கல்லூரிகளில் ஏன் கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்..!? படிக்கத்தானே போகிறோம்..! அப்புறம் எதுக்கு இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம்..!? போனோமா.. படித்தோமா.. வந்தோமான்னு இல்லாம.. எதுக்கு இந்த வேண்டாத வேலை..!? ஆட்டம், கொண்டாட்டம், கூத்து, கும்மாளம், அடிதடி, காதல், மண்ணாங்கட்டின்னு எதுக்கு இது..!? உண்மையச் சொல்லுங்க.. இப்படி ஒரு சிந்தனை உங்களில் எத்தனை பேருக்கு இருக்கு. கலை நிகழ்ச்சின்னாவே.. அதுவும் குறிப்பா கல்லூரி கலை நிகழ்ச்சின்னாவே.. கொட்டம் அடிப்பதற்குத்தான் என்பது நம்மிடையே பதிந்து போன ஒன்று. கும்பல் கும்பலா, குருப் குருப்பா சேர்ந்து ஆட்டம் போடறதுக்கும், சண்டை போடறதுக்கும், பொண்ணுகளை கலாட்ட செய்யறதுக்கும்தான் அது பயன்படும் என்று நாம் திடமாக நம்புகிறோம் அல்லவா..!? ஏன்.. கல்லூரி காலங்களில், ஆண்டு விழா, கலை நிகழ்ச்சி என்றவுடன் நமக்கே கூட அதுதான் தோன்றி இருக்கிறது. ஜாலியாக இருக்கலாம், கொட்டம் அடிக்கலாம், பல கல்லூரிகளிலிருந்து வரும் பெண் பிள்ளைகளை சைட் அடிக்கலாம்.. ஆடலாம்.. பாடலாம்.. லாம்.. லாம்.. எல்லாமிருக்கும். மகிழ்ச்சியான தருணம் அது. ஆயினும் கூடவே