முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லயோலா கல்லூரியில் ‘கசடற’ திரையிடல்:































இன்று லயோலா கல்லூரி ‘திரைப்பட’ மாணவர்களுக்கு ‘கசடற’ குறும்படத்தை திரையிட்டு, ஒரு கலந்துரையாடல் நிகழ்த்தினோம். மாணவர்களின் பல்வேறுத் தரப்பட்ட பார்வையை, விமர்சனத்தை பெற்றுத்திரும்பி இருக்கிறோம். பெரும்பான்மையான மாணவர்களுக்கு ‘கசடற’ பேசும் மைய கருத்து போய் சேர்ந்திருப்பதும், ஒரு படைப்பாக அது வெளிப்பட்டிருக்கும் தரத்தையும், நோக்கத்தையும் அவர்கள் உள்வாங்கிக்கொண்டது நிறைவாக இருந்தது.
மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் தந்து, ‘கசடற’ பேசும் கருப்பொருள், அதன் நோக்கம், அதனை படமாக்குவதில் பெற்றுக்கொண்ட அனுபவம், அதன் தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றை பகிர்ந்துக்கொண்டேன்.
லயோலா நிர்வாகம், திரு. அருண் கண்ணன் மற்றும் திரு.மணி ஶ்ரீதர் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.
இத்திரைப்படத்தை தயாரிக்க துணை நின்ற நண்பர்களுக்கும், Lumix Camera- வைக்கொடுத்து உதவி புரிந்த Panasonic TamilNadu Team மற்றும் Godox Lights- கொடுத்துதவிய Nikita Distributors-க்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


To Watch

Kasadara Short Film

https://youtu.be/O0BGoiXWkIs



#Kasadara Short film | Link in Bio #blenin |#ravisubramanian #chezhiyan #pcsreeram #vijayarmstrong #kasadara #shortfilm #tamil #education #tamilnadu #india #ghibran #ghibranmusic #ghibranmusical #cinematography #tamilcinema #loyola #loyolacollege #loyolachennai

கருத்துகள்