முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடக்கமுடியாத வலிகளுண்டு

அவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் 'நா.இராமகிருஷ்ணன்', ஊர் 'கீக்களூர்' என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது. அவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி.  எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை. அவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் 'லட்சுமி அம்மாள்', இவர் என் தந்தையின் அக்கா.  அக்கா மகளை...

தமிழில் ஒளிப்பதிவைப்பற்றிய ஒரு புத்தகம்

ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார், தமிழில் ஒளிப்பதிவைப்பற்றிய தகவல்கள் அடங்கி புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். 'அசையும் படம்' என்னும் இந்தப் புத்தகம் ஒளிப்பதிவின் அடிப்படை, சினிமா தோன்றிய வரலாறு மற்றும் ஆதார தொழில்நுட்பம் ஆகியவற்றை விவரிக்கிறது. எளிமையாக, தெளிவாக எல்லாருக்கும் புரியும்படியான, நிறைய தகவல்கள் கொண்ட புத்தகம் இது. சொல்லப்போனால் ஒளிப்பதிவில் ஆர்வம் இருக்கும் அனைவரின் கையிலும் இருக்கவேண்டிய ஒரு கையேடு இது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா 6-1-11 அன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. விழாவில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு.பாலுமகேந்திரா, இயக்குனர்கள் திரு.ஜனநாதன், பாண்டிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாதை மாற்றியப் பயணம்

இரண்டு இளைஞர்கள் இளமையின் துள்ளலில், பயணம் ஒன்றைத் துவங்குகிறார்கள். நாட்டைச் சுற்றி வரும் உல்லாசப் பயணமது. ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் ஐந்தாயிரம் மைல் தூரத்தை நாலரை மாதத்தில் கடப்பதாக திட்டம். பயண நோக்கம் உல்லாசம்,பொழுதுபோக்கு மற்றும் முடிந்த மட்டும் தன் இளமைக்குத் 'தீனி'ப்போடுதல். இளமையின் கொண்டாட்டமும், வாழ்க்கைத் திட்டமிடலும், வருங்காலத்துக்கான கனவும் கொண்ட அவ்விளைஞர்களின் அப்பயணம் அவர்களின் பிற்காலத்தை மாற்றியமைத்தது. அது... அவர்கள் திட்டமிடாதது.