அவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் 'நா.இராமகிருஷ்ணன்', ஊர் 'கீக்களூர்' என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.
அவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.
அவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் 'லட்சுமி அம்மாள்', இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மகளையே என் தந்தை மணமுடித்திருந்தார். இவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள். ஆறு பெண்கள், மூன்று மகன்கள். என் அம்மா மூத்தவர்கள், அவருக்கு அடுத்து 'அரசு சித்தி' , அப்பறம் 'மணி மாமா', 'முருகன் மாமா', 'தனம் சித்தி', 'தமிழ் சித்தி', 'மாறன் மாமா', 'விழி சித்தி', 'சித்திரா சித்தி' என்று கலந்துக்கட்டிய வரிசையில் பிள்ளைகள். இதில் அரசு சித்திக்கும், தனம் சித்திக்கும் திருமணம் ஆகிருந்தது. அரசு சித்திக்கு இரண்டு மகன்கள். 'கவாஸ்கர்' மற்றும் 'கார்த்திக்'. இரண்டுபேரும் தான் என் தோழர்கள், விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்குச்செல்லும் போதெல்லாம் இவர்களும் வந்திருப்பார்கள். நானும், என் அண்ணன் 'லெலினும்' இவர்களோடு சேர்ந்தே சிறுவயதை கடந்தோம். விடுமுறையில் தாத்தா வீட்டிற்கு எங்களை அனுப்பி வைப்பதில் எங்கள் பெற்றோர்கள் ஒரு சிறு வரைமுறை வைத்திருந்தார்கள், அதாவது எங்கள் வீட்டிலிருந்து இருவரும், சித்தி வீட்டுலிருந்து இருவரும் ஒன்றாக தாத்தா வீட்டிற்க்கு அனுப்புவதில்லை, இங்கிருந்து ஒருவர், அங்கிருந்து ஒருவர் என்ற முறை இருந்தது. அதாவது நான் போகும் போது கவாஸ்கரோ, கார்த்தியோ இருவரில் ஒருவன் வருவான், அண்ணன் போகும் போது மற்றவன் வருவான். அண்ணன், தம்பி இருவரும் பெற்றோர் பார்வைகளுக்கப்பால் இருக்கும் போது சண்டைபோட்டுக்கொள்ளும் சாத்தியம் அதிகமிருப்பததினால் இந்த ஏற்பாடு. அதனால் நாங்கள் நான்குபேரும் ஒரே சமயத்தில் தாத்தா வீட்டில் இருந்ததில்லை,விஷேச காலங்களைத்தவிர.ஆனால் இன்று நாங்கள் நான்குபேரும் இருந்தோம்.
உறவுகள் அனைத்தும் கூடிருந்தது. "தாத்தாவை பார்த்தியாடா" என்று என்னைக் கட்டிக்கொண்டு அம்மா, பாட்டி, சித்திகள் வரை அனைவரும் அழுதார்கள்.எல்லாரும் அழுதுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரும் தாத்தாவை அவர்களுக்கும் தாத்தாவிற்குமான உறவு முறையை வைத்து அழைத்து அழுதுக்கொண்டிருந்தார்கள். அப்பா, மாமா , அண்ணா, தம்பி என்று பல உறவுமுறைகள் விசும்பல்கள் இடையேவும், அழுகைக்கிடையேவும் கேட்டுக்கொண்டிருந்தது. நான் என் துக்கம் தாண்டி இதை கவனிக்கத் துவங்கினேன். ஏனெனில் என் மனதில் தாத்தா என்ற அடையாளப் பெயர்தான் அவருக்கிருக்கிறது, மற்றவர்கள் அவரை வேறு அடையாளப்பெயர் சொல்லி அழைப்பது இப்போதுதான் என் கவனத்திற்கு வருகிறது. அம்மாவோ,சித்திகளோ, பாட்டியோ "தாத்தா கூப்பிட்டார், தாத்தாவிடம் கேள், தாத்தா....தாத்தா..." என்றே எப்போதும் அவரை அடையாளப்படுத்திருக்கிறார்கள். அவர்களுக்கான உறவுமுறையில் அவரை அழைத்ததை நான் கவனிக்காமல் இருந்திருக்கிறேன் அல்லது அது அவ்வளவாக என் மனதில் பதியவில்லை. ஆனால் இப்போது அதை முழுமையாக கவனிக்கமுடிந்தது. மரணித்த மனிதனிடமிருந்துதான் நாம் நம் உறவை புதுப்பிக்கிறோம் என்று நினைக்கிறேன். வேறு எங்கேயும் இல்லாத அளவிற்கு உறவுமுறை வைத்து அழைப்பதை மரணம் சம்பவித்த வீட்டில் அதிகமாக பார்த்திருக்கிறேன்.
இப்படி ஒவ்வொவரும் என்னச்சொல்லி அழைக்கிறார்களென பார்க்கத்துவங்கினேன். பார்த்துக்கொண்டு வரும் போதுதான் அந்தக் குரலை கேட்டேன். "மகனே.. மகனே.." என்று அறற்றிக்கொண்டிருந்தாள் அந்தப் பாட்டி, ஆம் அவர்கள் என் தாத்தாவின் அம்மா. ஐம்பத்தைந்து வயதை கடந்த, பல பிள்ளைகளும் பேரன்களும் கொண்டிருந்த என் தாத்தாவிற்கு அம்மா என்ற உறவு அவள். உயிரோடு இருந்தாள், தன் கண் முன்னேயே தன் ஒரே மகன் இறந்துபோவதைக் கண்டாள். ஆண்டு அனுபவித்த மகன் தான், மரணவயதை நெறுங்கியவன் தான், ஆனாலும் ஒரு தாய் கண் முன்னே மகன் மரணித்துப்போவது என்பது எந்தத் தாயாளும் தாங்கிக்கொள்ளமுடியாதது. அழுதுக்கொண்டேயிருந்தாள், "மகனே மகனே" என்றும், சில சமயங்களில் வாயிற்குள்ளும் பிதற்றினாள், சட்டென்று பெருங்குரலெடுத்தும் கத்தினாள், " நான் பாவி ஆயிடேன்.., நான் பாவி ஆயிட்டேன்..நீ செத்து, நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே? அந்த எமன் என் உயிரை எடுத்துக்கிட்டு உன்னை விட்டு இருக்க கூடாதா?" என்று தாத்தாவின் உடலைப்பார்த்துப் பார்த்து அழுதாள். துக்கம் மறந்திருந்த எனக்கு அவளின் அழுகை என்னவோ செய்தது, விசும்பத் துவங்கினேன், அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கு துக்கம் அதிகமாயிற்று, அழத்துவங்கினேன். அதுவே நான் என் வாழ்வில் முதன் முதலில் கண்ட பிரிவின் வலி என்று இப்போது உணரமுடிகிறது.
அந்தப் பாட்டியின்(கொள்ளுப்பாட்டி) பெயர் "அன்னம்மாள்". கொள்ளுத்தாத்தா(நாராயண வர்மா) அவளை ஏறக்குறைய காதல் திருமணம் செய்திருந்தார். அதாவது ஒருதலைக்காதல், அவர் இளம்பிராயத்தில் குதிரையில் சுற்றிக்கொண்டிருந்தபோது, பக்கத்து ஊரில் ஆடு மேய்துக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணைக் கண்டார், கண்டதும் காதல், அந்தப் பெண் சிவப்பாக,ஒல்லியாக, நெடுநெடுவென வளர்ந்து அழகாக இருந்தாளாம். நேரே வீட்டுக்கு வந்தவர் முதல் வேலையாக அந்தப்பெண்ணைப்பற்றி வீட்டில் சொல்லிருக்கிறார். வீட்டில் பல காரணங்கள் சொல்லி தடுத்திருக்கிறார்கள். அதில் ஒன்று ஏழ்மை, இவர் வீடு வசதியான வீடு, அவளுடைதோ ஆடு மேய்த்து வாழும் குடும்பம். மற்றொரு காரணம் மிக முக்கியமானது, அவள் அப்போது வயதிற்கே வந்திருக்கவில்லை. ஆனாலும் அவர் கேட்கவில்லை, அடம்பிடித்து அவளை திருமணம் செய்து எங்களுக்கெல்லாம் கொள்ளுப்பாட்டியாக்கினார். பாட்டி வயதுக்கு வந்தது என் தாத்தாவின் வீட்டில்தானாம்.
அவளை அவர் மிகச்செல்லமாக பார்த்துக்கொண்டாராம், எந்த வேலையும் செய்ய விடமாட்டாராம், ராணிப்போல் வைத்திருந்திருக்கிறார், இருக்காத பின்னே, கண்டதும் காதலிக்கவைத்தவள் அல்லவா!. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது, அதுதான் என் தாத்தா. அவர் பிறந்து ஒன்னரையாண்டுகளில் என் கொள்ளுத்தாத்தா ஏதோ வியாதியில் மரணமடைந்திருக்கிறார். அதுவே அவளின் சந்தோஷமான காலத்தின் கடைசி நாளாயிற்று. அதன் பிறகு எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் மறுமணம் செய்துக்கொள்ளவில்லை, தன் மகனே போதும், அவனுக்காகவே வாழுவேன் என்று வாழ்ந்தவள். மகன் வளர்ந்து, திருமணம் முடித்து, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பெற்ற போது, எங்களையெல்லாம் தூக்கி வளர்த்தவள்.
அவள் யாருக்காக வாழ்ந்தாளோ, யாரை தன் வாழ்வாக நினைத்தாளோ அந்த மகன் தான் இப்போது இறந்துபோனது. நினைத்துப்பாருங்கள்,நாம் வாழ்வில் பல துன்பங்கள் கடந்துவந்திருக்கிறோம், ஆனால் சிறுவயதிலேயே கணவனை இழந்து, மகனுக்காக வாழ்ந்த அந்தத் தாய் கண்முன்னேயே தன் மகனை பலிகொடுத்த துயரம், இருந்த ஒரே இரத்த உறவையும் இழந்த துக்கம் எத்தகைய பெரிது, எவ்வளவு வலி. எந்த வலியையும் தாங்கிகொள்ளலாம், கடந்து போக வாழ்க்கை மீதமிருந்தால், அவளுக்கோ?
தாத்தாவின் உடலைக் குளிப்பாட்டும்போது தானே செய்வேன் என்றாள். அழுதுக்கொண்டே குளிப்பாட்டினாள், தண்ணீரைவிட கண்ணீரையே அதிகம் ஊற்றினாள்.ஊரே அழுதது. நான் அழுதுக்கொண்டேயிருந்தேன். உடலை புதைக்கும்வரை உடன் வந்தாள், மரபை மீறிய செயல், ஆனால் யாரும் தடுக்கவில்லை. நான் அன்று அழுததைவிட இன்று இதை எழுதும்போது அதிக துக்கமும், கண்ணீரும் வருகிறது. அடுத்து வந்த சில மாதங்களில் அவள் இறந்து போனாள். அவளின் மரண காரியங்களுக்கு நான் செல்லமுடியாமல் போயிற்று. ஆனாலும் அந்த கொள்ளுப்பாட்டி எப்போதும் என் நினைவிலிருப்பாள்.
நான் சிறுவயதில் கவனித்தது உண்டு, தினமும் கழனிக்குச் செல்வாள், விவசாயம் பார்ப்பாள், விட்டில் இருபதிற்கும் அதிகமான மாடுகளும், பல நூறு ஆடுகளும் வளர்த்தாள். எங்களை தூங்கவைக்க கதைச்சொன்ன கடைசி பாட்டி அவள் தான்.
"நான் பாவியாயிட்டேன்..நான் பாவியாயிட்டேன்" என்று அன்று அவள் கதறியது,இன்றும் என் நினைவிலிருக்கிறது. அதை நினைக்கும்போதெல்லாம் வாழ்க்கையில் கடக்கமுடியாத வலிகளுண்டு என்பதை நினைவில் கொள்கிறேன்.
(இது ஒரு மீள் பதிவு..)

nalla writting sir..
பதிலளிநீக்குthanku muna thanoda kulanthai sakarathanrathu entha thayalayaum / thanthayalayaum thanga mudiyatha onnu.. romba nalla ezhuthirukinga sir...
பதிலளிநீக்குநன்றி இராமசாமி..
பதிலளிநீக்குநீங்கள் உணர்ந்த வலிகள், என்னையும் ஆட்கொண்டது.
பதிலளிநீக்குThis explains meaning to the song's lyrics in the movie "Thenmerku paruvakattru":
பதிலளிநீக்குThere are many gods but for everybody only one அம்மா.
தண்ணீரைவிட கண்ணீரை விட்டே குளிப்பாட்டினார் என்ற வரிகளை வாசிக்கும்போது கண்ணில் நீர் துளிர்த்தது உண்மையான பாசத்தின் அளவை எதைக் கொண்டு நிர்ணயிப்பது உருக்கமான பதிவு ... ஒரு நாவல் எழுதும் அளவுக்கு உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் இருக்கும் என கருதுகிறேன் உங்கள் எழுத்தும் அவதானிப்புகளும் மிக அருமை முயற்சியுங்களேன்...
பதிலளிநீக்குஅந்தக் கொள்ளுப்பாட்டியை நீங்கள் அறிமுகப்படுத்திய போதே நான் அழத் தொடங்கிவிட்டேன். கடைசிவரை அழுதுகொண்டேதான் வாசித்தேன்.
பதிலளிநீக்குஅருமையாக எழுதுகிறீர்கள், வாழ்க! அனுபவமும் அதிலிருந்து ஓர் idea-உம் சேர்ந்துகொள்ளும்போது, எழுத்து (ஏன் எந்தப் படைப்பும்) தானே தன்னை உருவகித்து வெளிவிளக்கம் கொண்டு அமைகிறது.