அண்மைக் காலமாக உலகெங்கும் பல எழுச்சிப் போராட்டங்கள் நடக்கத் துவங்கி விட்டன. குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அடக்குமுறையிலிருந்தும், நீண்ட நாள் அரசாண்டவர்களிடமிருந்தும், மீண்டு வருவதற்கான எந்தனிப்புகள், சுதந்திரத்திற்கான வேட்கையாக அடையாளம் காணப்பட்டு, பல தேசங்களில் நடந்து வருகிறது. இந்தத் திடீர் தொடர் புரட்சிக்கான உத்வேகம், எகிப்தில் நடந்த புரட்சிக்குப் பின் ஏற்பட்டது. ஜனவரி 25, 2011-இல் துவங்கிய எகிப்துப் புரட்சி பிப்ரவரி 11, 2011-இல், அதன் முப்பது ஆண்டு காலம் ஆட்சியாளரான 'ஹோசனி முபாரக்கை' (Hosni Mubarak) பதவியிலிருந்து துரத்தியடித்தது. வெறும் பதினெட்டே நாட்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்த அப்புரட்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. வரலாறு முழுவதும் நிறைந்து கிடக்கும் பல புரட்சிகளை, புரட்சிக்கான எந்தனிப்புகளை நாம் அறிவோம். அதில் வெற்றி பெற்றதும், முடக்கப்பட்டதுமான பல புரட்சிகள் 'நிகழ' எடுத்துக்கொண்ட காலங்கள் அதிகம். ஆண்டுகள் பலவாகியும் இன்னுயிர்கள் பல இழந்தும் கிடைக்கப்பட்ட, கிடைக்கப்படாத ‘சுதந்திரப