செப்டம்பர் 1, 1939-இல் துவங்கிய அந்த போர் 1945 ஆகஸ்டு பதினைந்தாம் தேதி முடிவடைந்த போது மொத்தம் ஐந்து முதல் ஏழு கோடி உயிர்களை பலி வாங்கி இருந்தது. போலந்தை ஆக்கிரமித்தல் (பிடித்தல்) என்பதாக இந்தப் போரை ஜெர்மனி ஆரம்பித்து வைத்தது. பின்பு அது நண்பனுக்கு நண்பன், எதிரிக்கு எதிரி என்பதாய் விரிவடைந்து இரண்டாம் உலகப்போராக உருவெடுத்தது. ஆரம்பத்தில் ஜெர்மனியின் நாடு பிடிக்கும் போக்கை, சில நாடுகள் நட்பாக இருப்பதன் மூலமாகவும் நடுநிலையாக இருப்பதன் மூலமும் ஆதரித்தன. வலியும் வேதனையும் அவனவனுக்கு வரும்போதுதான் தெரியும் என்ற கணக்காய் ஜெர்மனி மெல்ல தன்னை நோக்கியும் தன் நட்பு நாடுகளை நோக்கியும் தன் கரங்களை நீட்டிய போதுதான் பல தேசங்கள் சுதாரித்துக்கொண்டு ஜெர்மனியை எதிர்க்கத் துவங்கியன. அதற்குள் ஐரோப்பியக் கண்டத்தில் பெரும்பலான நாடுகளை ஜெர்மனி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தது. 1939இல் துவங்கிய இந்த போரில் 1941 வரை வட அமெரிக்கா, நடுநிலை நாடு என்ற போர்வையில் தன் ஆயுதங்களை விற்று, கல்லா கட்டிக்கொண்டிருந்தது. டிசம்பர் ஏழு 1941இல் அவாய்(Hawaii) பகுதியில் இருந்த 'பேர்ல் துறைமுகம்' என்னும் அமெரி...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!