அண்மையில் இரண்டு புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது. 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராசீவ் கொலைப் பின்னணி' என்ற தலைப்புடைய இந்த புத்தகம் 1998 காலகட்டத்தில் 'இராசீவ் சர்மா' என்ற வடநாட்டு பத்திரிக்கையாளரால் எழுதப்பட்டு இப்போது தமிழில் 'ஆனந்தராசு' என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. சவுக்கு இணையத்தளத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் சொல்ல வரும் செய்தி, 'இராசீவ் காந்தியின் கொலை என்பது புலிகளைக் கூலிகளாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய சதி'என்பதாகும். பொதுவெளியில் ஏற்கனவே உலவும் கேள்விகள், ஐயங்கள் என்ற வரையரையில் பல செய்திகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராசீவின் கொலைக்குப் பின் நிகழ்ந்த சி.பி.ஐயின் விசாரணையில் தேங்கி நிற்கும் ஐயங்கள், பதில் தேடாத/கிடைக்காத கேள்விகள் என சிலவற்றை இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. உலகளாவிய சதி என்பதற்கு இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் சிலவற்றில் இலங்கையின் அப்போதைய பிரதமர் பிரேமதாசா, இஸ்ரேலிய உளவுத்துறையான மொசார்ட், போபர்ஸ் பீரங்கி ஊழல், இந்திய அரசியல்வாதிகள் என நீண்டு சந்திரா சாமி,சுப்பிரமணி
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!