முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திரைப்படம்: பிரிண்டிலிருந்து திரையிடல் வரை (From Print to Screening)

“தோழர், ப்ரிண்டிலிருந்து திரையிடல் வரை என்று ஒரு பதிவு போடவும். ஏனெனில் நான் இருதினங்களுக்கு முன், 7ஆம் அறிவு திரைப்படம் பார்த்தேன். பல காட்சிகளில், தேவையற்ற blur (out of focus) வந்தது. நிச்சயம் ரவி கே. சந்திரன் அவர்கள் இப்படிப் படம் பிடித்திருக்க மாட்டார் என்று நம்புகின்றேன். என்னவோ ப்ரொஜெக்டரில் பிரச்சினை. ஆகவே, முதல் பிரிண்ட் ரெடியானதிலிருந்து திரையரங்கில் திரையிடப்படும் வரை என்ன நடக்கின்றது என்பதைப் பற்றியும் பலவிதமான ப்ரோஜெக்டர்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதவும்.” நண்பர் சக்திவேல் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பதிவு எழுதப்படுகிறது. நன்றி சக்திவேல்.  திரைப்பட உருவாக்கத்தில் பல நிலைகள் உள்ளன. காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு திரைக்கதை ‘செல்லுலாய்டு’ படச்சுருளில் திரைப்படமாக எப்படி உருவாக்கம் செய்யப்படுகிறது என்பதைப்பற்றி பல கட்டுரைகள் இத்தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் எடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை என்னும் கட்டுரையின் தொடர்ச்சியாக இக்கட்டுரை எழுதப்படுகிறது. பிரிண்ட்டாக (Print - பிரதி) இருக்கும் திரைப்படம் நம்மிடம் எப்படி வந்துச் சேருகிறது என்பதையும், இப்பிரிண்டுகள்...

காளான் மேகம்

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறாம் தேதி அது நிகழ்ந்தது. உலகம் அதுவரை கண்டிராத அரக்கன் ஒருவன் உலகத்தாருக்கு அறிமுகமானான். அவனுக்குச் ‘சிறிய பையன்’ (Little Boy) என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் அவன் ஒரு பெரும் அரக்கன். கணநேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த அரக்கன் . உலகம் இன்றுவரை அவனை நினைவில் வைத்திருக்கிறது. அவன் வேறு யாருமல்ல, அணுகுண்டு என்னும் பேரரக்கன்தான் அவன். வட அமெரிக்கா தன் கொடூரத்தன்மையின் மற்றொரு முகத்தை அன்று வெளிக்காட்டியது. ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மீது முதல் அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த அடுத்த நொடியில் எழுபதாயிரத்திலிருந்து எண்பதாயிரம் மக்கள் தீயில் கருகி மாண்டு போனார்கள். அதாவது அந்நகரத்தின் முப்பது சதவிகித மக்கள் நொடியில் சாம்பலானார்கள். மேலும் எழுபதாயிரம் மக்கள் படுகாயம் அடைந்தனர். அதன்பின் 90,000 முதல் 1,66,000 மக்கள் வரை குண்டு வெடிப்பின் பின் விளைவுகளால், அதாவது தீக்காயம், கதிரியக்கப் பாதிப்பு போன்றவற்றால் இறந்துப் போனார்கள். 1950 வரை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் இறந்துபோனார்கள் ...

குளிர்ப்பிரதேசத்தில்..

புகைப்படம்: பசுமையான கொடைக்கானலின் மடியில் அமைந்த கல்லூரியில் பயிலும் ஏழு மாணவர்களின் கல்லூரிக்காலத்தை இந்தப்படம் விவரிக்கிறது. நான்கு ஆண்கள் மூன்று பெண்கள். இவர்களின் நட்பு, காதல் பற்றியான ஒரு பகிர்வு இந்தப்படம். இதன் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் பசுமையை முடிந்தவரை கொண்டுவர முயன்றிருக்கிறேன். மென்மையான ஒளிகளை பயன்படுத்தி இருக்கிறேன். காட்சிப்படுத்துதல், எடிட்டிங், இசை, சிறப்பு சப்தம் என்று எதிலும் இன்றைய நவீன திரைப்படங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப கதைச்சொல்லல் (Camera Shake, Zooming, Fast Cut, Swish Pan, Flash Sounds) முறையைப் பயன்படுத்தவில்லை. ஒரு மென்மையான கதை அதன் போக்கில் நெகிழ்வாக சொல்லப்பட்டிருக்கிறது. இது எனக்கும் இயக்குனருக்கும் முதல் படம். முதல் முயற்சி. முதல் முயற்சிக்கே உரிய எல்லா சாத்தியங்களையும் இந்தப்படம் கொண்டுள்ளது. இந்தப்படத்தின் பாடல் காட்சிகள் பெரும்பாலும் கொடைக்கானலின் இயற்கை ஒளியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டன. மாலை அந்தி நேரத்தில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. Super 16mm தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டப் படம். அந்த தொழில்நுட்பத்தின் குறைபாடுகளான 'Low...