புகைப்படம்:
பசுமையான கொடைக்கானலின் மடியில் அமைந்த கல்லூரியில் பயிலும் ஏழு மாணவர்களின் கல்லூரிக்காலத்தை இந்தப்படம் விவரிக்கிறது. நான்கு ஆண்கள் மூன்று பெண்கள். இவர்களின் நட்பு, காதல் பற்றியான ஒரு பகிர்வு இந்தப்படம்.
இதன் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் பசுமையை முடிந்தவரை கொண்டுவர முயன்றிருக்கிறேன். மென்மையான ஒளிகளை பயன்படுத்தி இருக்கிறேன்.
காட்சிப்படுத்துதல், எடிட்டிங், இசை, சிறப்பு சப்தம் என்று எதிலும் இன்றைய நவீன திரைப்படங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப கதைச்சொல்லல் (Camera Shake, Zooming, Fast Cut, Swish Pan, Flash Sounds) முறையைப் பயன்படுத்தவில்லை.
ஒரு மென்மையான கதை அதன் போக்கில் நெகிழ்வாக சொல்லப்பட்டிருக்கிறது. இது எனக்கும் இயக்குனருக்கும் முதல் படம். முதல் முயற்சி. முதல் முயற்சிக்கே உரிய எல்லா சாத்தியங்களையும் இந்தப்படம் கொண்டுள்ளது.
இந்தப்படத்தின் பாடல் காட்சிகள் பெரும்பாலும் கொடைக்கானலின் இயற்கை ஒளியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டன. மாலை அந்தி நேரத்தில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.
Super 16mm தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டப் படம். அந்த தொழில்நுட்பத்தின் குறைபாடுகளான 'Low Resolution, Grains' போன்றவை சில இடங்களில் நான் விரும்பாத பிம்பங்களைக் கொடுத்துள்ளது.
இதுவரை தமிழில் வெளிவந்த S16 படங்கள் (சுப்பிரமணியபுரம், மாயாண்டி குடும்பத்தார், பசங்க..) பெரும்பாலும் வெய்யில் பிரதேசங்களில் எடுக்கப்பட்டுள்ளன. இது மட்டுமே குளிர்ப்பிரதேசமும் குறைந்த வெளிச்சமும் கொண்ட கொடைக்கானலில் எடுக்கப்பட்டப் படம்.
மொத்ததில் ஒரு இயல்பான நெகிழ்வான படமாகக் கொடுக்க முயன்றிருக்கிறோம். ஒளிப்பதிவும் அதை மனதில் கொண்டே செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை பதிவர் சந்திப்பிற்கு தாங்கள் வந்தமைக்கு நன்றி. ஒளிப்பதிவு குறித்து சராசரி சினிமா ரசிகனும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒரு எளிமையான தொடரை நீங்கள் எழுத வேண்டும் என்பது எனது ஆவல். காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு//இந்தப்படத்தின் பாடல் காட்சிகள் பெரும்பாலும் கொடைக்கானலின் இயற்கை ஒளியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டன. மாலை அந்தி நேரத்தில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.//
பதிலளிநீக்குபெரும்பாலும் பாலு மகேந்திரா இதைப் போல் படமெடுப்பார் என்று படித்திருக்கிறேன். நன்று. இளம் காலை நேரத்தில் ரேவதி சென்னையின் மரங்களடர்ந்த சாலையில் நடந்து வரும் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது.
stills எல்லாம் அழகு.
வளர வாழ்த்துகள்.
நிழற்படங்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஉங்களின் முதல் படம் பெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
நன்றி நண்பர்களே..சிவகுமார்,தருமி, சத்ரியன்.
பதிலளிநீக்குசத்ரியன்:/உங்களின் முதல் படம் பெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.// நன்றி நண்பரே..படம் வெளியாகி(2010-ஜனவரி) சரியாக போகவில்லை.