முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

இது மேம்படுதல் நேரம் (Time for an update)

அண்மையில் ஒரு முக்கியமான ஹாலிவுட் இயக்குனரின் '3D' படமொன்றைப் பார்க்க சத்யம் போயிருந்தேன். அது என்ன படம் என்று சொன்னால், இங்கேயே இக்கட்டுரையை மூடிவிட்டு ஓடிவிடுவீர்களோ என்று பயமாகயிருக்கிறது. அவ்வளவு மொக்கையான படமது. இக்கட்டுரை அப்படத்தைப்பற்றியது அல்ல என்பதனால், நீங்கள் தைரியமாகத் தொடர்ந்து படிக்கலாம். பார்க்கப்போன படம் ‘3D' படமென்பதால், இதனிடையே திரையிடப்பட்ட மற்ற படங்களின் முன்னோட்டமும் ‘3D'-ஆக அமைந்தது. மூன்று படங்களுக்கான முன்னோட்டத்தைப் பார்க்க முடிந்தது. அதில் ஒன்று 'The Hobbit ' திரைப்படத்தினுடையது. நான் இதுவரை பல ‘3D' படங்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் 'The Hobbit ' படத்தின் முன்னோட்டம் திரையில் ஓடத் துவங்கிய சிறிது நேரத்திலேயே அதிலிருக்கும் வித்தியாசத்தை உணரமுடிந்தது. ‘3D’ திரைப்படம் என்பது, திரையில் முப்பரிமாணத் தன்மையை கொண்டுவர முயலும் ஒரு முயற்சி. கதாபாத்திரங்களை, அவர்களின் சூழலில் ‘foreground’ மற்றும் ‘background’-இலிருந்து பிரித்துக் காட்ட முயல்வது. அத்துடன் திரைக்கும் பார்வையாளனுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை திரையில் காட