‘மதுபான கடை’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் வேத் சங்கர் அவர்களை வேறொரு பட வேலையாக சந்தித்தபோது, அவர், தான் அப்போது செய்துகொண்டிருந்த படம் இது என சொல்லியதன் மூலம், ‘மதுபான கடை’ படத்தை அறிந்துக்கொண்டேன். அப்போது அப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தது என நினைக்கிறேன். மதுபான கடை என்னும் தலைப்பு குடியை ஆராதிக்கும் படம் என்பதாய் எனக்குப்பட்டது. குடியின் மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு இருந்ததில்லை (இதுவரை.. நாளை என்னாகுமோ..? யாருக்குத் தெரியும்.. ). அதனால் அதை தொடாமலேயே இருக்கிறேன். பரிசோதனையாகக் கூட முயற்சித்துப் பார்க்காமலிருக்கிறேன், பல நண்பர்களின் பரிகாசகங்களுக்கிடையேயும். அதனால் குடியைப் பற்றிய படம் என்பதனால், அதன் மேல் எவ்வித நாட்டமும் ஏற்படவில்லை. அப்படம் வெளியாகியபோதும் முதல் நாளே பார்க்க வேண்டும் என்ற எவ்வித உந்துதலுமற்று இருந்தேன். படம் வெளியாகி, நல்ல படம், பார்க்கவேண்டிய படம் என்ற செய்தி நண்பர்களின் மூலமாய் வந்தடைந்த போது, கால தாமதமாகி விட்டிருந்தது. அருகில் எந்த தியேட்டரிலும் அப்படம் ஓடவில்லை. அதற்குள்ளாகத் தூக்கி விட்டிருந்தார்க்ள். அட.. எங்கேதான் பார்ப்பது என்று ...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!