'Gravity' படத்தை எத்தனை முறை பார்த்தாலும், படத்தின் முடிவில் அது ஏற்படுத்தும் பரவச மனநிலையிலிருந்து அவ்வளவு சுலபமாக வெளிவரவே முடிவதில்லை. அத்திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அதுவெழுப்பும் மனக் கிளர்ச்சியை வார்த்தைகளால் இங்கே விவரித்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். இசையை அனுபவிக்கும் போது ஏற்படுமே.. அதுபோன்றொரு மன ஓட்டத்தை இப்படம் தொடர்ந்து ஏற்படுத்துகிறது. சிந்தனைத் தொடர்ச்சி ஒன்று ஏற்பட்டு வளர்ந்துகொண்டே போகிறது. வாழ்க்கை, அறிவியல், தத்துவம், சித்தாந்தம், இயற்கை, ஆத்திகம், நாத்திகம், இன்பம், துன்பம் என அது பயணிக்கும் பாதைகள் சொல்லில் அடங்கா. பூமியிலிருந்து 372 மைல் தூரத்தில் தனித்து விடப்படும் கதாப்பாத்திரங்களோடு நாமும் கைவிடப்பட்டதான ஒரு பரிதவிப்பை ஏற்படுத்துகிறது. அண்ட வெளியில் பரவிக்கிடக்கும் ஆழ்ந்த அமைதியே மனமெங்கும் எதிரொலிக்கிறது. பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தனித்து விடப்பட்டதாக உணர்கிறார்கள் என்பதை திரையரங்கில் விரவிக்கிடக்கும் அமைதி உணர்த்துகிறது. மற்ற திரைப்படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் வேறானதொரு தளத்தில் இயங்குவதை படம் துவங்கிய சிறிது ந
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!